/* */

நாமக்கல் மாவட்ட அரசு, தனியார் ஐடிஐ-களில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

நாமக்கல் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் ஐடிஐ தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்ட அரசு, தனியார் ஐடிஐ-களில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு
X

கலெக்டர் ஸ்ரேயாசிங்

நாமக்கல் :

நாமக்கல் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் ஐடிஐ தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது;

2021 - 2022 ஆம் கல்வி ஆண்டில், அரசு மற்றும் தனியார் ஐடிஐ தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவ மாணவிகள் சேர்க்கை நடைபெற உள்ளது. ஐடிஐக்களில் சேர்ந்து படிக்க விரும்புவோர் வருகிற 4ம் தேதிக்குள் ஸ்கில்ட்ரெய்னிங்.டிஎன்.ஜிஓவி.இன் என்ற வெப்சைட் மூலமாக ஆன்லைனில் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையம் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி மையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். கல்வி சான்று, ஜாதி சான்று, மாற்று சான்று, ஆதார் கார்டு, போட்டோ உடன் காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் மேற்கண்ட அலுவலங்களுக்கு சென்று விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 14 வயது முதல் அதிகபட்சம் 40 வயதுடைய ஆண்கள் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது வரம்பு ஏதும் இல்லை. விண்ணப்ப கட்டணம் ரூ. 50 ஆன்லைன் முறையில் செலுத்தப்பட வேண்டும். விண்ணப்பிக்க வரும்போது தங்களது மதிப்பெண் சான்றிதழ் 10, 8ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் கொண்டு வர வேண்டும். 2021 -ஆண்டில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவா;கள் மட்டும் 9ம் வகுப்பு சான்றிதழ் கொண்டு விண்ணப்பிக்கலாம்.

அரசு ஐடிஐ மையங்களில் படிக்கும் பயிற்சியாளர்களுக்கு, பயிற்சி காலத்தில் பிரதி மாதம் ரூ.750 உதவித்தொகை, விலையில்லா பாடபுத்தகம், வரைபடக் கருவிகள், 2 ஜோடி சீருடைகள், தகுதியானவர்களுக்கு சைக்கிள், பஸ் பாஸ், லேப்டாப், ஒரு ஜோடி காலணி ஆகியன வழங்கப்படும். அனைத்து பயிற்சியாளர்களுக்கும் உள்ளுர் தொழில் நிறுவனங்களில் உதவித் தொகையுடன் குறுகிய கால பயிற்சி (இன்டென்ஷிப்) வழங்கப்படும். வெற்றிகரமாக பயிற்சி முடித்தவர்களுக்கு பிரபல தொழிற்நிறுவனங்களில் ஒரு ஆண்டிற்கு ஒப்பந்த முறையில் தொழிற்பழகுநராக பயில வாய்ப்புள்ளது. மேலும் விவரங்களுக்கு ஐடிஐக்களுக்கு நேரில் சென்று அனுக லாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 2 Aug 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    தேனி, விருதுநகர், தென்காசியில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு
  2. காஞ்சிபுரம்
    அரசு விதிகளை மீறும் கனரக லாரி: இரவில் கண்காணிக்க தவறும் அலுவலர்கள்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை: ஆட்சியர் ஆலோசனை
  4. லைஃப்ஸ்டைல்
    மகிழ்ச்சி மந்திரங்கள்: வாழ்வை ரசிக்க வைக்கும் 23 எளிய சந்தோஷங்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த தூக்கத்திற்கு இரவு வணக்கம்..!
  6. போளூர்
    மாட்டு வண்டி மீது பைக் மோதல்: அண்ணாமலையார் கோயில் ஊழியர் உயிரிழப்பு
  7. லைஃப்ஸ்டைல்
    என் ராசாத்தி நீ வாழணும், அதை எந்நாளும் நான் பார்க்கணும் - பாடல்...
  8. வீடியோ
    🔴 LIVE : நான் இங்க சும்மா வந்து உட்காரல | Karunas ஆவேச பேச்சு ! |...
  9. திருவண்ணாமலை
    ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் ஆட்சி அமைப்பார்: ரோஜா நம்பிக்கை
  10. தமிழ்நாடு
    4வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் தற்கொலை