மாட்டு வண்டி மீது பைக் மோதல்: அண்ணாமலையார் கோயில் ஊழியர் உயிரிழப்பு

மாட்டு வண்டி மீது பைக் மோதல்: அண்ணாமலையார் கோயில் ஊழியர் உயிரிழப்பு
X
மாட்டு வண்டி மீது பைக் மோதிய விபத்தில் அண்ணாமலையார் கோயில் ஊழியர் உயிரிழந்தார்.

மாட்டு வண்டி மீது பைக் மோதிய விபத்தில் அண்ணாமலையார் கோயில் ஊழியர் உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் என்ஜிஓ நகர், நேரு வீதியை சேர்ந்தவர் சாமிநாதன் மகன் வேல்முருகன். இவர் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஊழியராக பணி செய்து வந்தார்.

இந்நிலையில் நேற்று வழக்கம்போல் வீட்டில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு திருவண்ணாமலைக்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலை பவித்திரம் கூட் ரோடு அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக முன்னாள் சென்று கொண்டிருந்த மாட்டு வண்டி மீது இவரது இருசக்கர வாகனம் மோதியதாம்.

அதில் தூக்கி வீசப்பட்ட வேல்முருகன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உள்ளார். உடனடியாக அங்கு இருந்தவர்கள் போலீசுக்கு தகவல் அளித்துள்ளனர். தொடர்ந்து வெறையூர் போலீசார் விரைந்து வந்து படுகாயம் அடைந்த வேல்முருகனை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே வேல்முருகன் பரிதாபமாக இறந்துள்ளார். இது குறித்து அவரது மனைவி நித்யா கொடுத்த புகாரின் பேரில் வெரையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆட்டோவும், தனியார் பஸ்சும் நேருக்குநேர் மோதி விபத்து

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சாதிக்பாஷா மகன் அசான்பாஷா. கடலாடி கீழ் தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் வெற்றிச்செல்வன், இவர்கள் இருவரும் பூண்டு வியாபாரிகள்.

இவர்கள் இருவரும் கூட்டாக லோடு ஆட்டோவில் பூண்டு ஏற்றிக்கொண்டு பக்கத்தில் உள்ள ஊர்களுக்கு சென்று தினமும் வியாபாரம் செய்து வந்துள்ளனர்.

அதேபோல் நேற்றும் வழக்கம் போல லோடு ஆட்டோவில் பூண்டுகளை ஏற்றிக்கொண்டு வியாபாரத்திற்காக புறப்பட்டு சென்றுள்ளனர்.

வேலூர் சுற்றியுள்ள கிராமங்களில் பூண்டு விற்பனை செய்ய இவர்கள் திட்டமிட்டு வேலூர் நோக்கி சென்றுள்ளனர்.

தொடர்ந்து போளூர் பைபாஸ் சாலையில் வரும்போது வேலூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த தனியார் பேருந்தும் லோடு ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் ஆட்டோ கவிழ்ந்து இடிப்பாடியில் சிக்கிக்கொண்டது. அப்போது ஆட்டோவில் இருந்த அசான் பாஷா, வெற்றிச்செல்வன் இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த போளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரண்டு பேரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து அசான்பாஷாவின் தந்தை சாதிக்பாஷா கொடுத்த புகாரின்பேரில் போளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!