/* */

அதிமுகவை வீழ்த்துவதே லட்சியம் - மு.க.ஸ்டாலின்

அதிமுகவை வீழ்த்துவதே லட்சியம் - மு.க.ஸ்டாலின்
X

நாமக்கல் மாவட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் நாமக்கல் நகரில் உள்ள பூங்கா சாலையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திமுக வேட்பாளர்கள் போட்டியிடும் இராசிபுரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் மா.மதிவேந்தன், சேந்தமங்கலம் திமுக வேட்பாளர் கே.பொன்னுசாமி, நாமக்கல் திமுக வேட்பாளர் பெ.இராமலிங்கம், பரமத்தி-வேலூர் திமுக வேட்பாளர் கே.எஸ்.மூர்த்தி, திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் ஆகியோரை ஆதரித்து ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய ஸ்டாலின், தமிழகத்தில் நடைபெற உள்ள 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 200 அல்ல 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். 10 ஆண்டுகளாக பின்தங்கிய தமிழகத்தை காப்பாற்ற ஒருமுறை எனக்கு வாய்ப்பு தாருங்கள். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் தங்கமணி சத்தமில்லாமல் கொள்ளை அடித்து வருபவர், இவர் காற்றாலை மின்சாரம் வாங்கியதில் ஊழல், மின் வாரியத்திற்கு உதிரி பாகங்கள் வாங்கியதில் ஊழல் என பல்வேறு‌ ஊழல்களை செய்துள்ளார். எனவே அதிமுகவை வீழ்த்துவதே நமது லட்சியம் என்று பிரசாரத்தில் பேசினார்.

Updated On: 17 March 2021 1:04 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...