/* */

நாமக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சி பதவிகளுக்கு அதிமுக சார்பில் விருப்ப மனு

நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள 25 உள்ளாட்சி பதவிகளுக்கு அதிமுக சார்பில் விருப்ப மனு வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சி பதவிகளுக்கு அதிமுக சார்பில் விருப்ப மனு
X

நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு அதிமுக சார்பில் போட்டியிடுபவர்களுக்கான விருப்பமனுக்களை முன்னாள் அமைச்சர் தங்கமணி வழங்கினார். அருகில் முன்னாள் அமைச்சர் டாக்டர் சரோஜா.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9ம் தேதிகளில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலுடன் பிற மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கும் அக்டோபர் 9ம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தைப் பொறுத்த வரையில் காலியாக உள்ள மாவட்ட ஊராட்சிக்குழு 6-வது வார்டு உறுப்பினர் பதவி (பொது), எருமப்பட்டி ஒன்றியத்தில் 15-வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் பதவி (பொது), கோப்பணம்பாளையம், திம்மநாயக்கன்பட்டி, ஆவல்நாயக்கன்பட்டி, கூடச்சேரி, நடுக்கோம்பை பஞ்சாயத்து தலைவர்கள் பதவிகளுக்கு அடுத்த மாதம் 9ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

மேலும், கிராம பஞ்சாயத்து வார்டுகளில் காலியாக உள்ள மண்டகப்பாளையம் 3-வது வார்டு, கோணங்கிப்பட்டி 9-வது வார்டு, பவித்திரம் 2-வது வார்டு, இருக்கூர் 7-வது வார்டு, தின்னனூர்நாடு 5-வது வார்டு, பிள்ளாநத்தம் 4-வது வார்டு, என்.புதுப்பட்டி 8-வது வார்டு, பெரப்பன்சோலை 2-வது வார்டு, கார்கூடல்பட்டி 6-வது வார்டு, மங்களபுரம் 8-வது வார்டு, செருக்கலை 9-வது வார்டு, பில்லூர் 4-வது வார்டு, காரைக்குறிச்சிபுதூர் 3-வது வார்டு, எஸ்.உடுப்பம் 6-வது வார்டு, திருமலைப்பட்டி 7-வது வார்டு, பொட்டணம் 3-வது வார்டு, உத்திரகிடிகாவல் 7-வது வார்டு, ஆண்டிபாளையம் 6-வார்டு ஆகியவற்றிற்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளன.

நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள மொத்தம் 25 உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. வருகிற 22ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

இந்த நிலையில் நாமக்கல் மாவட்ட அதிமுக சார்பில் 25 உள்ளாட்சி பதவிகளுக்கு காலியாக உள்ள இடங்களுக்கான விருப்ப மனு வழங்குதல் நேற்று துவங்கியது. மாவட்ட அதிமுக அலுவலகத்தில் விருப்ப மனு வழங்குதல் நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் மின்சாரத்துறை அமைச்சருமான தங்கமணி தலைமை வகித்து விருப்ப மனுக்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் சமூக நலத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா, பரமத்தி வேலூர் எம்எல்ஏ சேகர், நாமக்கல் முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர், சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் சுரேஷ் குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 16 Sep 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...