/* */

ஒத்திவைக்கப்பட்ட 8ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 20 முதல் நடைபெறும்

நாமக்கல் மாவட்டத்தில், மழையால் ஒத்திவைக்கப்பட்ட, தனித்தேர்வர்களுக்கான, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுகள், வரும் 20ம் தேதி முதல் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

ஒத்திவைக்கப்பட்ட 8ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 20 முதல் நடைபெறும்
X

இது குறித்து நாமக்கல், அரசு தேர்வுத்துறை உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டத்தில், கடந்த நவ.8ம் தேதி முதல், 12ம் தேதி வரை நடைபெற இருந்த தனித்தேர்வர்களுக்கான 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது, வருகிற 20ம் தேதி முதல், 24ம் தேதி வரை அந்தத்தேர்வுகள் நடைபெற உள்ளன. தேர்வுகள் காலை, 10 மணி முதல், 12 மணி வரை 2 மணி நேரம் நடைபெறும். 20ம் தேதி திங்கள்கிழமை தமிழ், 21ம் தேதி செவ்வாய்கிழமை ஆங்கிலம், 22 ம் தேதி புதன்கிழமை கணிதம், 23ம் தேதி வியாழக்கிழமை அறிவியல், 24ம் தேதி வெள்ளிக்கிழமை சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெறும்.

மேலும், 8ம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள், வருகிற 14ம் தேதி முதல், இண்டர்நெட்டில், விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, புதிய தேர்வு அட்டவணை மற்றும் ஹால் டிக்கட் டவுன்லோடு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 8 Dec 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  3. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் நிறைந்த வாழ்க்கைப் பயணம்! கணவருக்கு திருமண ஆண்டுவிழா...
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அன்பான ஆண்டுவிழா வாழ்த்துகள்!
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில், அன்பின் வெளிப்பாடுகள்!
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,316 கன அடியாக அதிகரிப்பு
  8. திருநெல்வேலி
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. ஈரோடு
    பெருந்துறையில் வாகன சோதனையில் போதை மாத்திரை, கஞ்சா சாக்லேட் பறிமுதல்:...
  10. காஞ்சிபுரம்
    +1 தேர்வு முடிவுகள் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் 86.98% மாணவர்கள்...