/* */

நாமக்கல்லில் வரும் 12ம் தேதி தேசிய லோக் அதாலத்: மாவட்ட முதன்மை நீதிபதி தகவல்

நாமக்கல் மாவடத்தில் வருகிற 12ம் தேதி தேசிய லோக் அதாலத் எனும் மக்கள் நீதிமன்றம் நடைபெறும். மாவட்ட முதன்மை நீதிபதி தகவல்.

HIGHLIGHTS

நாமக்கல்லில் வரும் 12ம் தேதி தேசிய லோக் அதாலத்: மாவட்ட முதன்மை நீதிபதி தகவல்
X

நாமக்கல் மாவடத்தில் வருகிற 12ம் தேதி தேசிய லோக் அதாலத் எனும் மக்கள் நீதிமன்றம் நடைபெறும்.

இது குறித்து, மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்டசட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான குணசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியள்ளதாவது:

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின்படி, நாமக்கல், திருச்செங்கோடு மற்றும் ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் பரமத்தி சார்பு நீதிமன்றத்தில் வரும் மார்ச் 12ம் தேதி, தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற உள்ளது. ஏற்கனவே, கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளில் சமரசம் செய்து கொள்ளக்கூடிய குற்றவியல் வழக்குகள், பேங்க் செக் தொடர்பான வழக்குகள், வங்கி கடன்கள், கல்வி கடன்கள் தொடர்பான வழக்குகள்.

மோட்டார் வாகன விபத்து, விவாகரத்து தவிர்த்த மற்ற குடும்ப பிரச்னைகள், உரிமையியல் வழக்குகள் (நிலம், சொத்து, பாகப்பிரிவினை, வாடகை விவகாரங்கள்), விற்பனை வரி, வருமான வரி, சொத்து வரி பிரச்னைகள் போன்ற வழக்குகள் விசாரித்து தீர்வு காணப்படும். மக்கள் நீதிமன்றம் முன்பாக முடித்துக் கொள்ளும் வழக்குகளுக்கு மேல்முறையீடு கிடையாது. மேலும், மக்கள் நீதிமன்றம் மூலம் முடித்துக் கொள்ளும் வழக்குகளுக்கு செலுத்தப்படும் கட்டணம், முழுமையாக திருப்பிப் பெற வாய்ப்பு உள்ளது.

பொதுமக்கள் யாருக்காவது, நீதிமன்றத்தில், மேலே குறிப்பிட்ட வழக்குகள் நிலுவை இருந்தால் அவர்கள் லோக் அதலாத்தில் மனு அளித்தால் அவர்களுக்கு சட்ட ரீதியாகவும், சமரச முறையிலும் தீர்வு காணப்படும். என்று கூறப்பட்டுள்ளது.

Updated On: 1 March 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  3. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  6. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  7. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  8. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  10. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்