/* */

நாமக்கல்லில் ஒரு ஆண்டிற்குள் 10 லட்சம் மரக்கன்றுகள்: கலெக்டர் வேண்டுகோள்

நாமக்கல் மாவட்டத்தை பசுமையாக்கும் திட்டத்தில் ஓர் ஆண்டுக்குள் 10 லட்சம் மரக்கன்றுகள் நட வேண்டும் என கலெக்டர் கூறினார்.

HIGHLIGHTS

நாமக்கல்லில் ஒரு ஆண்டிற்குள் 10 லட்சம் மரக்கன்றுகள்: கலெக்டர் வேண்டுகோள்
X

நாமக்கல் மாவட்ட பசுமைக்குழு கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயாசிங் பேசினார்.

நாமக்கல் :

நாமக்கல் மாவட்டத்தை பசுமையாக்கும் திட்டத்தின்கீழ் ஓர் ஆண்டுக்குள் 10 லட்சம் மரக்கன்றுகள் நட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் வலியுறுத்தியுள்ளார்.

நாமக்கல் மாவட்ட பசுமைக் குழு கூட்டம், கலெக்டர் ஆபீசில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசியதாகவது:

நாமக்கல் மாவட்டத்தில் 17 சதவிகிதம் மட்டுமே பசுமை பரப்பளவு உள்ளது . இதனால் நிலத்தடி நீர்மட்டம் 1300 அடிக்கு கீழே சென்றுவிட்டது. பல இடங்களில் குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. இதனை கருத்தில் கொண்டு அரசுத் துறை, தனியார்துறை, கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் இணைந்து ஓர் ஆண்டுக்குள் பயன்படாத நிலங்கள், புறம்போக்கு நிலங்கள், குளம் குட்டைகளில் சீமை கருவேலன் முட்புதர்களை அகற்றி பனைவிதைகளையும், நாட்டு மரங்களையும், நட்சத்திர மரங்கøளையும் நட்டு அடர்வனங்களை உருவாக்க வேண்டும். மாவட்டத்தில், வருகிற ஒரு ஆண்டிற்குள் 10 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுஉள்ளது. மரங்களை நட்டு, சிறப்பாக பராமரிக்கும் துறை, தனியார் நிறுவனங்களுக்கு வருடம் ஒருமுறை விருது வழங்கி கவுரவிக்கப்படும். விரைவில் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மூலம் இந்த திட்டம் துவக்கி வைகப்படும். பொதுமக்கள் அனைவரும் பசுமை நாமக்கல் மாவட்டம் உருவாக தங்களின் பங்களிப்பை நல்க வேண்டும் என கலெக்டர் கேட்டுக்கொண்டார்.

கூட்டத்தில், வருவாய்துறை, வனத்துறை , பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி துறை, வேளாண்மை, தோட்டக்கலை துறை, பொது சுகாதாரம், மருத்துவத்துறை, பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை, மாவட்ட தொழில் மையம் நகராட்சி கமிஷனர்கள், சப் கலெக்டர்கள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 18 Aug 2021 2:15 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  2. வால்பாறை
    வால்பாறை சாலையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    நண்பா..மனைவியை லவ் பண்ணுடா..! திருமண வாழ்த்து..!
  4. இந்தியா
    பெங்களூரு செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சியில் அவசர...
  5. வானிலை
    வடமேற்கு இந்தியாவில் வெப்ப அலை எச்சரிக்கை, வெப்பநிலை 40 டிகிரிக்கு...
  6. வீடியோ
    DMK ஆட்சி, Kamarajar ஆட்சி Seeman சொன்ன பதில் !#seeman #seemanism #ntk...
  7. வீடியோ
    Kamarajar-ரிடம் படம் எடுக்க சொன்ன இயக்குநர் Sundaram ?#seeman...
  8. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  9. சினிமா
    இந்தியன் 2 படத்தில் இந்தியன் 3 அப்டேட்.. சூப்பர் சர்ப்ரைஸ்!
  10. வீடியோ
    SavukkuShankar-ரை அவமதித்த பெண் காவலர்கள் !#seeman #seemanism...