/* */

நாட்டுப்புறக் கலைஞர்கள் கலெக்டரிடம் மனு

ஊரடங்கு காலத்தில் மாதந்ததோறும் ரூ.10 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் நாட்டுப்புறக் கலைஞர்கள் கலெக்டரிடம் மனு

HIGHLIGHTS

நாட்டுப்புறக் கலைஞர்கள் கலெக்டரிடம் மனு
X

கிருஷ்ணகிரி மாவட்ட கிராமியக் கலைஞர்கள் நலச்சங்கம், பாரம்பரிய பம்பை கை சிலம்பாட்டக் கலைஞர்கள் சங்கம், சிவசக்தி அனைத்து கலைஞர்கள் நலச்சங்கம், காமதேனு கிராமிய கலைக்குழு சங்கம், தெருக்கூத்து கலைஞர்கள் நலச்சங்கம், நாதஸ்வர தவில் இசைக்கலைஞர்கள் முன்னேற்ற சங்கம் ஆகிய சங்கங்களைச் சேர்ந்த கலைஞர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில்:

தமிழகத்தில் பாரம்பரிய பண்பாட்டை பேணிக் காப்பதில் பெரும் பங்காற்றி வரும் கிராமியக் கலைஞர்கள் தமிழகத்தில் 3 லட்சம் குடும்பங்களுக்கு மேலாக உள்ளனர். இவர்களின் வாழ்வாதாரமாக விளங்கக்கூடிய கலைநிகழ்ச்சிகள், 90 சதவீதத்திற்கு மேல் கோவில் திருவிழாக்களில்தான் நடைபெறுகிறது . தற்சமயம் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவில் கோவில் திருவிழாக்கள் நடைபெற தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு கலைஞர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அனைத்து நிறுவனங்களும், தொழிலாளர்களும் செயல்பட்டு கொண்டிருக்கும்போது கிராமியக் கலைத் தொழிலாளர்கள் மட்டும் நிகழ்ச்சிகள் இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறார்கள். கிராமியக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் அதிகமாக மக்கள் கூடும் பெரிய கோவில் திருவிழாக்களைத் தவிர்த்து, சிறிய மற்றும் கிராமக் கோவில்களில் மட்டுமாவது திருவிழாக்கள் மற்றும் கொடை விழாக்கள் நடத்திடவும், சமூக இடைவெளியில் கலை நிகழ்ச்சிகள் நடத்திடவும், அனுமதி வழங்க வேண்டும்.

அவ்வாறு திருவிழாக்கள் நடத்துவதில் இடர்பாடுகள் இருக்குமாயின் கிராமியக் கலைஞர்களின் வாழ்வாதாராத்தை காத்திடும் வகையில், ஊரடங்கு தடை காலத்தில் மாதந்ததோறும் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

Updated On: 14 April 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. நாமக்கல்
    நாமக்கல் கொல்லிமலை அரசு ஐடிஐக்களில் தொழிற்பயிற்சிகளில் சேர...
  3. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  4. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  5. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  6. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  7. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...