/* */

கரூர் ரயில் நிலையத்தில் ரயில்வே கமிட்டி உறுப்பினர் ஆய்வு

கரூரிலிருந்து பெங்களூருக்கு பகல் நேரத்தில் ரயில் இயக்க ரயில்வே கமிட்டி உறுப்பினரிடம் கோரிக்கை

HIGHLIGHTS

கரூர் ரயில் நிலையத்தில் ரயில்வே கமிட்டி உறுப்பினர் ஆய்வு
X

கரூர் ரயில் நிலையத்தில் ஆய்வு செய்யும் ரயில்வே கமிட்டி உறுப்பினர் பொன். பால கணபதி உள்ளிட்டோர்.

கரூர் ரயில் நிலைய சந்திப்பில் ரயில்வே பயணிகள் கமிட்டி உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர். பகல் நேரத்தில் பெங்களூருக்கு இரயில் இயக்க பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

பாரதிய ஜனதா கட்சியின் மாநில பட்டியல் அணி தலைவரும், ரயில்வே பயணிகள் கமிட்டி உறுப்பினருமான பொன் பாலகணபதி, சிவராஜ் கே.காண்ட்கே, பபிதா பார்மர், எட்டுமனூர் ராதாகிருஷ்ணன், ப்ரணாப் பவுரா ஆகிய 5 பேர் கொண்ட குழு கரூர் ரயில் நிலைய சந்திப்பில் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின்போது, பயணிகளுக்கு தேவையான வசதிகள் உள்ளனவா? வேறு என்ன வசதிகள் தேவை? பயணிகள் காத்திருப்பு அறை, கேண்டீன், கழிப்பிடங்கள், பார்சல், பொருட்கள் பாதுகாப்பு அறை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்தனர். அதன்பிறகு கரூர் நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் விசாகன், கரூரில் இருந்து பெங்களூருக்கு பகல்நேரத்தில் ரயில் இயக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர். பல்வேறு தரப்பினர் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டனர். ஆய்வின்போது கரூர் ரயில் நிலைய மேலாளர் ராஜராஜன், பாஜக மாவட்ட தலைவர் கே.சிவசாமி, மாவட்ட பொதுச்செயலாளர் நகுலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Updated On: 11 Nov 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது