/* */

பணியின்போது உயிர் நீத்த போலீசாருக்கு நினைவஞ்சலி

பணியின்போது உயிர் நீத்த போலீசாருக்கு கரூர் எஸ்பி நீத்தார் நினைவு தூணில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

HIGHLIGHTS

பணியின்போது உயிர் நீத்த போலீசாருக்கு நினைவஞ்சலி
X

நீத்தார் நினைவு தூணில் அஞ்சலி செலுத்தும் காவல் அதிகாரி.

காவல்துறையில் பணியாற்றும்போது வீரமரணமடைந்த, ஆண்டுதோறும், அக்., 21ம் தேதி நீத்தார் நினைவு நாள் தினம் அனுசரிக்கப்படுகிறது.

இதன்படி, கடந்தாண்டு செப் 1ம் தேதி முதல், நடப்பாண்டு ஆக 30ம் தேதி வரை நாடு முழுவதும் மொத்தம், 377 போலீசார் பணியின்போது உயிர் நீத்துள்ளனர். இவர்களுக்கு இன்று காலை கரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், நீத்தார் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

நீத்தார் நினைவு தூணில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் உள்ளிட்ட அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். உயிர்நீத்த போலீசாரின் பெயர்கள் நினைவு கூர்ந்து, மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் , கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் கண்ணன், ராதாகிருஷ்ணன், கீதாஞ்சலி, அசோக்குமார் , டிஎஸ்பி தேவராஜன், முத்தமிழ் செல்வன், ஶ்ரீதர் உள்பட பல்வேறு போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Updated On: 21 Oct 2021 11:58 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க