/* */

தேர்தலை புறக்கணித்து உண்ணாவிரதம் இருந்த பொதுமக்கள் : சமாதானம் செய்த ஆட்சியர்

கரூரில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றாததால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்து உண்ணாவிரதம் இருந்த பொதுமக்கள்.

HIGHLIGHTS

தேர்தலை புறக்கணித்து உண்ணாவிரதம் இருந்த பொதுமக்கள் : சமாதானம் செய்த ஆட்சியர்
X

உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக பதாகை வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்திய ஆட்சியர்.

கரூர் புலியூர் அருகில் உள்ள குமரன் குடில், குமரன் லே-அவுட் பகுதிகளில் சுமார் எழுபத்தி நான்கு வீடுகள் உள்ளன. அரசால் அங்கிகரிக்கப்பட்ட இந்த மனைப்பிரிவில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர், சாலை வசதி, கழிவுநீர் வெளியேற்றும் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. இதுகுறித்து இப்பகுதியில் வசிக்கும் மக்கள் உள்ளாட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்து உள்ளனர்.

இந்நிலையில், குமரன் குடில், குமரன் லேஅவுட் பகுதிகளை உள்ளடக்கிய மாவட்ட ஊராட்சி வார்டு 8 க்கான இடைத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் 9ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்தப் பகுதி மக்கள் அடிப்படை வசதி செய்து தராததால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக குமரன் குடில் பகுதியில் அறிவிப்பு பேனர் வைத்துள்ளனர். மேலும், அந்த பகுதியில் கருப்புக் கொடிகளை கட்டியும் 50க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையறிந்த மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் புலியூர் குமரன் குடில் பகுதிக்கு நேரில் சென்று பொதுமக்களை சந்தித்தார். பொதுமக்களின் கோரிக்கைகள் 3 மாத காலத்துக்கள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததோடு, மக்கள் ஜனநாயக கடமையாகிய வாக்களிக்கும் கடமையிலிருந்து பின்வாங்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு பதாகையை அகற்றி அனைவரும் 100% ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பதாக உறுதியளித்தனர். மாவட்ட ஆட்சியரின் உத்தரவையடுத்து, 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க இன்று பணிகள் துவக்கப்பட்டது.

குறைந்த மின் அழுத்தம், அதிக மின் அழுத்தம் என்று மாறி மாறி வந்த நிலையில் புதிய மின் மாற்றி இரண்டு நாட்களுக்குள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவும், சாலை வசதி மற்றும் கழிவுநீர் வடிகால் வசதி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிகளை எடுத்து செய்ய உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதையடுத்து மக்களின் தேர்தல் புறக்கணிப்பு, உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்தது.

Updated On: 30 Sep 2021 4:14 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’