/* */

கைத்தறி துணிகளை பயன்படுத்த ஆட்சியர் வேண்டுகோள்

கரூரில் 7வது கைத்தறி தினத்தையொட்டி அமைக்கப்பட்ட சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையை கலெக்டர் பிரபுசங்கர் பார்வையிட்டார்

HIGHLIGHTS

கைத்தறி துணிகளை பயன்படுத்த ஆட்சியர் வேண்டுகோள்
X

கரூரில் நடைபெற்று வரும் கைத்தறி கண்காட்சியில் கைத்தறி ரகங்களை பார்வையிடுகிறார் ஆட்சியர் பிரபுசங்கர்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 7 வது கைத்தறி தினத்தையொட்டி சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை முகாம் நடைபெற்று வருகிறது.

தேசிய கைத்தறி தினமானது கடந்த 1905 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 7 ம் நாள் கல்கத்தாவில் உள்ள நகர மன்றத்தில் வங்கப்பிரிவினையை எதிர்த்தும், சுதேசி இயக்கத்தின் துவக்கமாகவும் பொதுமக்களால் நடத்தப்பெற்ற சுதந்திரப்போராட்டத்தினை நினைவு கூறும் விதமாகவும், உள்நாட்டு உற்பத்திப்பொருட்களின் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் விதமாகவும் கொண்டாப்பட்டு வருகிறது.

7 வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் கைத்தறி கண்காட்சி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் கரூர் மாவட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி பெட்ஷீட்டுகள் , தலையணை உறைகள், துண்டுகள், பருத்தி சேலை இரகங்கள், விருதுநகர் மாவட்ட அருப்புக் கோட்டை பகுதி பருத்தி சேலைகள், மற்றும் திருச்சி மாவட்ட உறையூர் பருத்தி சேலை இரகங்கள் ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

கைத்தறிகண்காட்சியை பார்வையிட்ட ஆட்சியர் பிரபு சங்கர் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கைத்தறி துணிகளை வாங்கி பயன்படுத்தி நெசவாளர்களின் வாழ்வாரத்தை மேம்படுத்த முன்வர வேண்டும் என தெரிவித்தார்.

கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர்களுக்கான கைத்தறி ஆதரவு திட்டம் அரசின் பங்களிப்பு தொகையுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது . இத்திட்டத்தின் கீழ் 90 சத அரசு மான்யம் மற்றும் 10 சத உறுப்பினர் பங்களிப்புடன் சங்க உறுப்பினர்கள் 5 நபர்களுக்கு தலா ரூ.3500/ - மதிப்பிலான தறி உபகரணங்களும், கைத்தறி நெசவாளர்களுக்கு முத்ரா கடன் திட்டத்தின் கீழ் இரண்டு நபர்களுக்கு தலா ரூ. 50,000/ கடனுதவிகளையும் ஆட்சியர் பிரபு சங்கர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், துணை இயக்குனர் சுகதார பணிகள் டாக்டர். சதீஷ், கைத்தறி துறை உதவி இயக்குனர் கார்த்திகேயன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 7 Aug 2021 5:39 PM GMT

Related News

Latest News

  1. உசிலம்பட்டி
    மதுரை அருகே திடீரென நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த வாகனம்
  2. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலில் மினுமினுக்கும் சரும் வேண்டுமா? கவலையை விடுங்கள்!
  3. வீடியோ
    மீண்டும் வெடித்தது Suriya-வின் சர்ச்சை மும்பையில் என்ன நடக்கிறது ? |...
  4. லைஃப்ஸ்டைல்
    ஈருள்ளம் ஓருள்ளமாகி ; சீரோடு சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்..!
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு
  6. ஈரோடு
    சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கல்லூரியில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  7. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி அருகே, வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஆறு பேர்...
  8. ஈரோடு
    சத்தி, புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகள்:...
  9. கவுண்டம்பாளையம்
    கோவையில் கனமழையால் சாலைகளில் தேங்கிய வெள்ள நீர் ; வாகன ஓட்டிகள்...
  10. கோவை மாநகர்
    பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு : தலைமறைவான ஓட்டுநர்...