மதுரையில், மறுவாழ்வு முகாம் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம்..!

மதுரையில், மறுவாழ்வு முகாம் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம்..!
X

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.

மதுரையில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில், மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

மதுரை.

மதுரையில், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் 350 மாணவர்களுக்கு இலவசமாக நோட்டுப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.

மதுரை மாவட்டம், உச்சம்பட்டி பகுதியில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில், முதலாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஈழ ஏதிலியர் மறுவாழ்வு கழகம் மூலம் டிஹெச்ஏ திட்டத்தின் கீழ், மாணவர் மன்ற கூட்டத்தை மாதந்தோறும் நடத்தி மாணவர்களின் தனித்திறன், நல்லொழுக்கத்தை வளர்க்கும் விதமாக செயல்படுத்தப்பட்டு வருகிரியாது.

இத்திட்டத்தில் மாணவர்களை ஒருங்கிணைத்து 350 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவசமாக நோட்டுகள் வழங்கப்பட்டது. இதனை,மதுரை மாவட்ட தொண்டர் அணி லோகேஸ்வரி ஒருங்கிணைத்தார். இந்நிகழ்வில், தலைவர் விநாயகமூர்த்தி, செயலாளர் குறிஞ்சிமலர், பொருளாளர் சிவமலர், முகாம் தொண்டர் சந்திரகலா ஆகியோர் பங்கேற்றனர்.

இதில், பணியாற்றும் முகாம் சுய உதவி குழுக்கள், விளையாட்டு குழு இளைஞர்கள் முன்னிலையில் அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக நோட்டுகள் வழங்கப்பட்டது.

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!