மல்லி சீரியல் இன்றைய புரோமோ - ஜூன் 19, 2024

மல்லி சீரியல் இன்றைய புரோமோ - ஜூன் 19, 2024
மல்லி, ரஞ்சிதாவிடம் நக்கலாக பேசி, நீ எவ்வளவு வெறுப்பு காட்டினாலும் எனக்கு நீ செத்த பாம்புதான் என்கிறாள் மல்லி.

மல்லி சீரியல் இன்றைய புரோமோ - ஜூன் 19, 2024

விரைவில் அப்டேட் செய்யப்படும்.

மல்லி சீரியல் நேற்றைய எபிசோட் - ஜூன் 18, 2024

வெண்பா டாடாவுக்கு கால் செய்து, தன்னுடைய ஃப்ரேம் உடைந்து கிடக்கிறது எனவும், அதில் தனது சர்ட்டிபிகேட் கிழிக்கப்பட்டு கிடப்பதாகவும் கூறி அழுகிறாள். இதனால் அவளுடைய அப்பா விஜய் பதற்றமடைகிறான்.

இதனையடுத்து அந்த அறைக்கு பாட்டியும் பேத்தியும் வருகிறார்கள். அவர்கள் மல்லி குறித்து தப்பு தப்பாக பேசுகிறார்கள். நீ உன் மாமனை திருமணம் செய்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா என விஜய்யின் சித்தி கூறுகிறாள்.

அந்த நேரத்தில் அங்கு வித்யா அம்மா வருகிறார். அவரிடம் விஜய் பேச வேண்டும் என்று தெரிவிக்கிறார். உடனே அவரிடம் விஜய், சித்தியிடம் போனைக் கொடுங்கள் என்று சொல்ல, யார் கிழித்தார்கள் என இருவரும், விஜய்யிடம் கூறுகிறார்கள். மல்லிதான் கிழித்தாள் என சொல்ல, விஜய் அதிர்ச்சியடைகிறான்.

மல்லி பெயரைச் சொன்னதும் விஜய்க்கு கோபம் வருகிறது. வித்யாவும் தனது பங்குக்கு, மல்லிக்கு சப்போர்ட் செய்கிறாள். மல்லிதான் இப்படி பண்ணா என ஆதாரம் காட்ட முடியுமா? ஒரு ஏழைப் பெண் பணக்கார வீட்டுக்கு மருமகளாக வந்துவிடக்கூடாதே இப்படி ஏதாவது சொல்லி அவளைத் துரத்த திட்டமிடுகிறீர்களே என வாங்குகிறாள். இதனால் இருவரும் தாங்கள் ஊருக்கே போவதாக தெரிவிக்கிறார்கள்.

கடைசியா மல்லிதான் வீட்டில் இருந்தாள். கதவை அடைத்துக் கொண்டு அறைக்குள் இருந்தாள். அவள் என்ன செய்திருப்பாள். அவள்தான் இதைக் கிழித்திருப்பாள் என இருவரும் மல்லுக்கட்ட, வித்யா மீண்டும் மல்லிக்கு சப்போர்ட் செய்கிறாள்.

வெண்பாவை அவ்வளவு நேசிக்கும் மல்லி எப்படி இதுபோன்று நடந்துகொள்வாள் என கேட்கிறாள் வித்யா. அதற்குள் சித்தி முந்திக்கொண்டு சின்னக் குழந்தையை அழ வைக்கிறவர்கள் நல்லாவே இருக்க மாட்டார்கள் நாசமாகத் தான் போவார்கள் என திட்ட ஆரம்பிக்கிறார். எவ்வளவு ஆசையா இதை அப்பாவிடம் காட்ட அவள் எடுத்து வந்தாள். இப்படி ஆகிவிட்டதே. இப்படியாக குழப்பம் அந்த வீட்டில் நடக்கிறது.

கடைசியாக வித்யா அந்த மொபைலை வாங்கி, விஜய்யை கிளம்பி சீக்கிரம் வீட்டுக்கு வரச் சொல்கிறார்.

மல்லி மீது கோபத்தில் இருக்கிறான் விஜய். ஆனால் உண்மை எதுவும் தெரியாமல் கொஞ்சம் குழப்பமாகவும் இருக்கிறான். அதேநேரம் சித்தியும், பேத்தியும் அவசர கதியில் பறந்துகொண்டிருக்கிறார்கள். அதற்கு ஏன் இப்படி அவசரப்படுகிறீர்கள் என அக்கா கேட்க, அதற்கு தனக்கு பசிக்குதுடி என சொல்ல, அனைவரும் கோபப்படுகின்றனர்.

அந்த நேரத்தில் மல்லி வீட்டுக்கு வருகிறார். மல்லியிடம் நீ ஏன் கிழித்தாய் என்று கேட்க, தனக்கு எதுவும் புரியவில்லை என மல்லி கூறுகிறார். மல்லியின் சித்திக்கும் விஜய்யின் சித்தக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது. விஜய்யின் சித்தி மல்லியை கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வருகிறாள். உள்ளே சர்ட்டிபிகேட் கிழிந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறாள் மல்லி. அவர்களுக்குள் குழப்பம் உருவாகிறது.

மல்லி கிழித்தாளா இல்லையா என இருவரும் மாறி மாறி பேசிக் கொண்டிருக்கிறார்கள். வெண்பா அழுதுகொண்டே இருக்கிறாள். அனைவரும் மல்லியை கார்னர் செய்ய, மல்லி பரிதவிக்கிறாள்.

அதேநேரம் மல்லி தான் செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் அவர் செய்யவே இல்லை என பெரியம்மாவும் வித்யாவும் நம்புகிறார்கள். ஆனால் மல்லி தான் தான் அதை கிழிச்சேன் என்று கூறுகிறார். இப்படியே பேசிக் கொண்டே செல்கிறார்கள்.

விஜய் இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துவிடுவான். அவன் வந்தால் பிரச்னை பெரியதாக ஆகி விடும். அப்போது வெண்பா தன்னை வேண்டாம் என்று சொல்லிவிடுவாள் என்று கூறுகிறாள் மல்லி. ஆனால் உண்மையில் அந்த சர்ட்டிபிகேட்டை கிழித்தது ரஞ்சிதாதான். அதை அவளே மல்லியிடம் கேட்கிறாள். மல்லி சொன்ன பொய்யை பார்த்து தான் அசந்துவிட்டதாக கூறி, தானே அதை கிழித்ததை ஒப்புக் கொண்டுவிட்டார் ரஞ்சிதா. அதேநேரம் இதற்கு ஆதாரம் இருக்கிறதா என்று கேட்கிறாள் மல்லி.

மல்லி, ரஞ்சிதாவிடம் நக்கலாக பேசி, நீ எவ்வளவு வெறுப்பு காட்டினாலும் எனக்கு நீ செத்த பாம்புதான் என்கிறாள் மல்லி.

மல்லி சீரியல் இன்றைய எபிசோட் - ஜூன் 19, 2024

விரைவில் அப்டேட் செய்யப்படும்.

Tags

Next Story