பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தில் பயனடைந்த 95 ஆயிரம் விவசாயிகள்

பிரதமரின் கிசான் சம்மான்  திட்டத்தில் பயனடைந்த 95 ஆயிரம் விவசாயிகள்

நாமக்கல்லில் நடைபெற்ற விவசாயிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே கலந்துகொண்டு பேசினார்.

பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், 95,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர் என, மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே கூறினார்.

நாமக்கல் மாவட்டத்தில், பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், 95,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர் என, மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே கூறினார்.

பிரதமரின் கிசான் சம்மான் நிதியுதவி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 17-ஆவது முறையாக உதவித் தொகை நிதி விடுவிக்கும் திட்டம், உத்தரபிரதேச மாநிலம், வாரணாசியில் பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, நாமக்கல் நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்புத் துறை மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே கலந்துகொண்டு, 1 லட்சம் விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கும் பணியைத் தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகளின் நலனுக்கு உயர் முன்னுரிமை கொடுத்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக, நாடு முழுவதும் விவசாயிகளுக்கான கவுரவ நிதி திட்டம், இதுவரை 16 தவணைகள் விடுவிக்கப்பட்டு, தற்போது 17வது தவணை விடுவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 9 கோடிக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ. 20,000 கோடி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், இந்த திட்டத்தில் மேலும் அதிக கவனம் எடுத்து, அதிக அளவில் விவசாயிகளை சேர்க்க வேண்டும். விவசாயிகள் இந்த திட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டு வேளாண் பணிகளை மேம்படுத்த வேண்டும். மகளிர் வேளாண் தொழிலில், அதிக அளவில் ஈடுபடுவதற்கு அவர்களுக்கான தொழில்நுட்ப பயிற்சிகளை, வேளாண் அறிவியல் நிலையங்கள் மூலம் வழங்கி வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில், பிரதம மந்திரியின் விவசாயிகள் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், 17வது தவணை நிதியை 95,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவர் அறிவியல் பல்கலை விரிவாக்க கல்வித்துறை இயக்குனர் அப்பா ராவ், பெங்களூர் அட்டாரி 11வது மண்டல இயக்குனர் டாக்டர் வேங்கடசுப்ரமணியன், நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் வேல்முருகன், கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் செல்வராஜூ உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags

Next Story