/* */

காஞ்சிபுரம்: முகாம்கள் ரத்து.. தடுப்பூசி தட்டுபாடா ??

காஞ்சிபுரத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக சிறப்பு தடுப்பூசி முகாம்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம்: முகாம்கள் ரத்து.. தடுப்பூசி தட்டுபாடா ??
X

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுபடுத்த அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ளது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாள்தோறும் 50க்கும் மேற்பட்ட தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது. இதுவரை 89,000 பேர் தடுப்பூசி தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் பெரு நகராட்சி சார்பில் அன்னை சத்யா நகரில் இன்று சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறும் எனவும் இதனை உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் மற்றும் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் ஆகியோர் துவக்கி வைக்க உள்ளதாகவும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி வாட்ஸ்அப் மூலம் காஞ்சிபுரம் நகர் முழுவதும் செய்தி அனுப்பப்பட்டது.

இதனால் இன்று காலை அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பொதுமக்கள் வருகை தந்த போது அப்பகுதியில் முகாம் நடைபெறவில்லை எனவும் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக முகாம் ரத்து செய்யப்பட்டதாகவும் திருமண மண்டப வாயிலில் உள்ள நபர்களால் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

பொதுமக்கள் தடுப்பூசி செலுத்துக் கொள்ள ஆர்வமாக வந்து கொண்டிருக்கும் நிலையில் தடுப்பூசி தட்டுப்பாடு என்று காரணம் பொதுமக்களிடையே பயத்தை அதிகரித்துள்ளது என கூறலாம்.

Updated On: 31 May 2021 1:32 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் தரும் முருங்கைக் கீரை சூப் செய்வது எப்படி?
  2. உலகம்
    இன்னலுறும் நோயாளிகளுக்கு உதவும் செவிலியரை போற்றுவோம்..! நாளை செவிலியர்...
  3. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...
  4. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
  5. நாமக்கல்
    நாமக்கல் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100...
  6. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  7. நாமக்கல்
    மோகனூர், பரமத்தி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள்: ஆட்சியர் ஆய்வு
  8. ஈரோடு
    பவானி பகுதியில் 15 கிலோ அழுகிய பழங்கள் பறிமுதல்
  9. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  10. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி ஆசிரியையிடம் நகை பறித்த இருவர் கைது