/* */

காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறி சந்தை பேருந்து நிலையத்திற்கு இடமாற்றம்

காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறி சந்தை பேருந்து நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறி சந்தை பேருந்து நிலையத்திற்கு இடமாற்றம்
X

பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையம்

காஞ்சிபுரம் பெரு நகராட்சி பகுதியில் கொரோனா நோய்தொற்று அதிகமாக பரவுவதை தடுக்கும் பொருட்டு ரயில்வே சாலையில் இயங்கி வந்த ராஜாஜி காய்கறி மார்க்கெட் சந்தை தற்காலிகமாக காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலும் , ஓரிக்கை பேருந்து நிலையத்திற்கும் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்தகாலங்களில் காய்கறி வியாபாரிகளுக்கு நகராட்சியால் கடை ஒதுக்கீடு செய்த அடையாள அட்டை படியே தற்போதும் பேருந்து நிலையத்தில் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

அதேபோல் ரயில்வே சாலையில் இயங்கி வந்த மளிகை கடைகள் அதே இடத்தில் சமூக இடைவெளியை கடைபிடித்து விற்பனை செய்ய கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தப்படுகின்றனர்.

சில்லரை வியாபாரிகள் விற்பனை செய்யும் காய்கறிகளை அந்தந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அங்கேயே வாங்கி கொள்ளுமாறும் , தேவையற்றது காய்கறி சந்தையில் கூட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

இடமாற்றம் செய்யப்படும் காய்கறி கடைகள் வரும் மே 20ஆம் தேதி அதாவது வியாழக்கிழமை முதல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் திருமதி மகேஸ்வரி ரவிக்குமார் அறிவித்துள்ளார்.

Updated On: 18 May 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  2. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  3. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  4. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  5. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  6. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  7. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  8. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  9. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  10. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி