/* */

சோலார் மோட்டார்-பாதுகாப்பு வேலி உள்ளிட்ட சேவை: மகிழ்ச்சி தெரிவித்த விவசாயிகள்

பயிர் சேதங்களை தவிர்க்க சோலார்‌ மின்வேலி திட்டத்தினை அனைவரும் பயன்படுத்தி கொள்ள முன் வரவேண்டும்

HIGHLIGHTS

சோலார் மோட்டார்-பாதுகாப்பு வேலி உள்ளிட்ட சேவை:    மகிழ்ச்சி தெரிவித்த விவசாயிகள்
X

 முசரவாக்கம் கிராம விவசாயி நிலத்தில் அமைக்கப்பட்ட விண்வெளி மற்றும் விஷார் பகுதியில் அமைக்கப்பட்ட சோலார் மின்மோட்டார் அமைப்பு

காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் பொறியியல் துறை சார்பில் விவசாயிகளுக்கு பல்வேறு நல திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. அவ்வகையில், சோலார் மின் மோட்டார் , மின்வேலி, குறைந்த வாடகையில் வேளாண் உபகரணங்களான ஜேசிபி , டிராக்டர் உள்ளிட்ட பணிகளையும் வேளாண் பொறியியல் துறை மேற்கொண்டு வருகிறது.

சிறு குறு விவசாயிகளுக்கு சோலார் மோட்டார் வழங்கும் திட்டம் 70% மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கபடுவதாகவும் , 15 சோலார் பேனல் அமைத்தால் , 5 எச்.பி திறன் கொண்ட மோட்டார் அமைத்து நாளொன்றுக்கு 10மணி நேரம்‌ இயக்காலாம்.

இதன் மூலம் இதன் மூலம் 50 சென்ட் பரப்பளவு கொண்ட நிலத்திற்கு நீர் பாய்ச்சலாம். இதை விவசாயிகள் வெறும் 76 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 240 மானியமாக வழங்கப்படும். விவசாய நிலங்களுக்கு மின்சாரம் வழங்க வாய்ப்பு இல்லாத சூழ்நிலையில் உள்ள விவசாயிகள் இந்த சோலார் மின்மோட்டார் இணைப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்

இதை எவ்வித தங்கு தடையின்றி 25 வருடங்கள் செயல்பாட்டில் இருக்கும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை ஐந்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்த வருடம் ஏழு விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகும் இதற்கான பதிவு உழவன் செயலி மூலம் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இதேபோல் விளைநிலங்களை விலங்குகள் சேதப்படுத்தாமல் இருக்க சுற்றி பாதுகாப்பான எவ்வித உயிர் சேதமும் ஏற்படாத வண்ணம் மின்வேலி அமைக்கலாம். மின்வேலியில் ஏதேனும் விலங்குகள் சிக்கினால் விண்வெளி கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள அலாரம் ஒலிக்கும் இதன் மூலம் விவசாயிகள் தங்கள் நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர் சேதங்களை முற்றிலும் தவிர்க்கலாம். இதற்கும் உரிய மானியம் விவசாயிகளுக்கு அளிக்கப்படுகிறது.

எனவே விவசாயிகள் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் வழங்கப்படும் நல திட்டங்களை பயன்படுத்தி வேளாண் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.


Updated On: 12 May 2022 6:00 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்