/* */

காஞ்சிபுரம் அருகே 22டன் ரேஷன் அரிசி பறிமுதல்: வருவாய் அலுவலர் அதிரடி

காஞ்சிபுரம் சிறுகாவேரிபாக்கம் அருகே வெளி மாநிலத்திற்கு கடத்த முயன்ற 22டன் ரேஷன் அரிசியை, மாவட்ட வருவாய் அலுவலர் குழு பறிமுதல் செய்தது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் அருகே 22டன் ரேஷன் அரிசி பறிமுதல்: வருவாய் அலுவலர் அதிரடி
X

காஞ்சிபுரத்தை அடுத்த சிறுகாவேரிபாக்கம் அருகே லாரிகள் மூலம் வெளிமாநிரங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட வருவாய் அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பன்னீர்செல்வம், அங்கு 2மினி லாரிகளில் இருந்து 1சரக்கு லாரிக்கு அரிசி மூட்டைகள் ஏற்றப்படுவதை உறுதி செய்தார்.

இதனை கண்ட ஒட்டுநர்கள் தப்பி ஓடினர். மேலும் ஒரு மினி லாரி தப்பி சென்றது. இதனையெடுத்து, நின்று கொண்டிருந்த லாரியை சோதனையிட்டதில் ரேசன் அரிசி என்பதும் வெளி மாநிலத்திற்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதனையெடுத்து ஒரு மினி லாரி உட்பட இரண்டு லாரிகளை பறிமுதல் செய்த குடிமை பொருள் குற்ற புலனாய்வு போலீசார், தப்பி ஓடிய லாரி ஓட்டுநர்களை தேடி வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களில் வெளிமாநிலத்திற்கு கடத்த முயன்ற 60டன் ரேசன் அரிசியும், 6லாரிகள் பறிமுதல் செய்திருப்பது குறிப்பிடதக்கது.

Updated On: 30 Dec 2021 1:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை புதிய பேருந்து நிலைய பணிகள்: கூடுதல் தலைமைச் செயலாளர்...
  3. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  4. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  5. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  8. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  9. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  10. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!