/* */

காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் மழை நீர் வடிகால் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகள் மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறைகள் மழை நீர் தூர்வாரும் பணியினை மேற்கொண்டனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் மழை நீர் வடிகால் பணிகள்: ஆட்சியர் ஆய்வு
X

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் மழை நீர் தேங்கும் காரணம் குறித்து கேட்டறிந்தார்.

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறை மேற்கொண்ட மழை நீர் கால்வாய் புனரமைப்பு பணிகளை ஆட்சியர் கலைச்செல்வி மோகன் ஆய்வு மேற்கொண்டார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பே மழை நீர் வடிகால் மற்றும் நீர் நிலைகளை சுத்தம் செய்து நீர் தங்கு தடை இன்றி செல்லும் வகையில் பணிகளை முன்னேற்பாடாக மேற்கொள்ள ஆட்சியர் கலைச்செல்வி மோகன் உத்தரவிட்டிருந்தார்.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறையினர் பேருந்து நிலையம் காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மழைநீர் கால்வாய்களில் உள்ள கழிவுகள் மற்றும் அடைப்புகளை சரி செய்து பணிகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில் இன்று காலை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் கங்கைகொண்டான் மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மழைநீர் கால்வாய் பகுதிகளை தீடிர் ஆய்வு மேற்கொண்டார்.

கங்கைகொண்டான் மண்டபம் அருகே கால்வாய் பணிகள் நிறைவுற்ற பின் அதனை மூட மறந்ததால் அப்பகுதியில் நின்றிருந்த பின் தவறி அதில் சிக்கினார்.

உடனடியாக அருகில் ஆய்வு மேற்கொண்டிருந்த ஆட்சியர் உடனடியாக அப்பகுதிகளை மூட உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் கழிவறை மற்றும் மழைநீர் வடிகால் கால்வாய்களை ஆய்வு மேற்கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், வருவாய் கோட்டாட்சியர் ரம்யா, மாநகராட்சி ஆணையர் கண்ணன் , பொறியாளர் கணேசன் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்

Updated On: 7 Oct 2023 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தள்ளாடும் வயதுவரை ஒன்றாகும் உறவு கணவன்-மனைவி..!
  2. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
  4. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்டைல் மா இஞ்சி தொக்கு செய்வது எப்படி?
  6. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  7. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  8. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  9. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  10. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!