/* */

எஸ்.பி சுதாகர் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்.பி சுதாகர் தலைமையில் காவல்துறை அலுவலர்கள் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றனர்

HIGHLIGHTS

எஸ்.பி சுதாகர் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு
X

நாளை அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்பி தலைமையில் காவல் துறை அலுவலர்கள் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றனர்

இந்திய அரசியல் சட்டச் சிற்பியான டாக்டர் அம்பேத்கர், 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி மத்திய பிரதேசத்தில் உள்ள மோவ் எனும் நகரில் பிறந்தார். நாட்டின் மிகப் பெரும் சமூக சீர்திருத்தவாதியாக கொண்டாடப்படும் இவர், மிகச் சிறந்த கல்வியாளராகவும், பொருளாதார நிபுணராகவும், அரசியல்வாதியாகவும், சட்ட நிபுணராகவும் விளங்கியவர்.

இந்த நிலையில் அம்பேத்கர் பிறந்த நாளான வரும் ஏப்ரல் 14ம் தேதியை பொது விடுமுறை தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நாளில், நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும்.

நாளை இந்தியா முழுவதும் அம்பேத்கர் பிறந்த நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி காலை 11 மணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம் சுதாகர் தலைமையில் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து "சமத்துவ நாள்" உறுதி மொழியான,

சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்குமுறைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து போராடி, ஒதுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்காகவும் , ஒடுக்கப்பட்டவர்களுடைய சமத்துவத்திற்காகவும், வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து, எளிய மக்களின் உரிமைகளைப் பற்றி விழிப்புணர்வை ஊட்டிய, நம் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளில்,

சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும், சக மனிதர்களைச் சாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காணமாட்டேன் என்றும், சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பேன் என்றும் உளமார உறுதி ஏற்கிறேன் என எஸ் பி சுதாகர் வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் அமைந்துள்ள அம்பேத்கர் திரு உருவப் படத்திற்கு மரியாதை செலுத்தும் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா.

இதேபோல் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்தரய்யா உறுதிமொழி வாசிக்க அரசு அலுவலர்கள் அனைவரும் கூறி உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) பாபு , மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின் நலத்துறை அலுவலர் பிரகாஷ் வட்டாட்சியர் காஞ்சனாமாலா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 13 April 2023 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  3. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  4. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  5. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  6. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  7. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  8. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர்...
  10. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்