/* */

காவலர் வீரவணக்க நாள்: குண்டுகள் முழங்க மலர் வளையம் வைத்து அஞ்சலி

காஞ்சிபுரம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற காவலர் வீரவணக்க நாளில் வீரமரணமடைந்த காவலர்களுக்கு மலர் வளையம் வைத்துஅஞ்சலி செலுத்தினர்

HIGHLIGHTS

காவலர் வீரவணக்க நாள்: குண்டுகள் முழங்க மலர் வளையம் வைத்து அஞ்சலி
X

காஞ்சிபுரம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற காவலர் வீர வணக்க நாளில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் எஸ்.பி. எம்.சுதாகர்

1959 ஆம் ஆண்டு அக்டோபர் 21 அன்று லடாக் பகுதியில் ஹாட்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் ஒளிந்திருந்து மேற்கொண்ட திடீர் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் உயிரிழந்தனர். கடல் மட்டத்தில் இருந்து 16,000 அடி உயரத்தில் அன்று வீரமரணமடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21 ஆம் நாள் காவலர் வீரவணக்க நாள் நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு மட்டும் நாடு முழுவதும் பல்வேறு சம்பவங்களில் 377 காவலர்கள் உயிர் தியாகம் செய்துள்ளனர். இவர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்தும் வகையில் இன்று காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் ஆயுதப்படை மைதானத்தில் அறுபத்தி மூன்று குண்டுகள் முழங்க காஞ்சி சரக டிஐஜி எம்.சத்யபிரியா , எஸ்.பி. சுதாகர் , துணை காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட காவல்துறை அலுவலர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்

இந்நிலையில் ஓய்வு பெற்ற காவல் அலுவலர்களும் கலந்துகொண்டு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

Updated On: 21 Oct 2021 4:00 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடரும் கோடை மழை: நேற்று 111.4 மி.மீ...
  6. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  10. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்