/* */

உள்நோயாளிகளின் உறவினர்கள் விடுதியில் பகலிலும் தங்க அனுமதிக்க கோரிக்கை

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் உள்ள உள்நோயாளிகளின் உறவினர்களை தங்கும் விடுதியில் பகலிலும் தங்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை

HIGHLIGHTS

உள்நோயாளிகளின் உறவினர்கள் விடுதியில் பகலிலும் தங்க அனுமதிக்க கோரிக்கை
X

உள்நோயாளிகளின் உறவினர்கள் தங்க கட்டப்பட்டுள்ள இலவச தங்கும் விடுதி 

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள் மற்றும் புற நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அனைத்து வசதிகளுடன் கூடிய மாவட்ட தலைமை மருத்துவமனை என்பதால் ஏழை, எளிய பொதுமக்கள் உள்நோயாளிகளாக இங்கு தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் பெருநகராட்சி சார்பில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டம் 2016 - 17கீழ் உள் நோயாளிகளுடன் அவர்களின் உறவினர்கள் தங்க ரூபாய் ஒரு கோடி மதிப்பீட்டில் இலவச தங்கும் விடுதி மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டு தனியார் அமைப்பு மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இதில் தற்போது உள் நோயாளியுடன் தங்கள் உறவினர்கள் இரவு நேரத்தில் மட்டுமே தங்கும் விடுதியில் தங்க அனுமதிக்கப்படுகின்றனர். பகல் நேரங்களில் மருத்துவமனை வளாகத்தில் உள்ள பழைய தங்கும் வெளி அரங்கத்தில் அமர்ந்து ஓய்வெடுக்கும் நிலை உருவாகியுள்ளது.

ஒரு கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அறையில் பகல் நேரங்களிலும் நோயாளிகளின் உறவினர்கள் தங்க அனுமதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Updated On: 25 July 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    வேளாண் பல்கலைக் கழகத்தில் உலக தாவர நல தின நாள் கொண்டாட்டம்!
  2. தொண்டாமுத்தூர்
    ரூ. 2 லட்சம் மதிப்புள்ள உயர் ரக போதை பொருள் பறிமுதல்: 3 பெண்கள் உள்பட...
  3. இந்தியா
    சிஏஏ திட்டதின் கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்
  4. அரசியல்
    ஐஎன்டிஐஏ ஆட்சிக்கு வந்தால் வெளியில் இருந்து ஆதரவு: மம்தா அறிவிப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    அப்பா அம்மாவுக்கு கல்யாண நாள் வாழ்த்து- இப்படிக்கு பிள்ளைகள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ - என் காதல் தேவதைக்கு வாழ்த்துகளை...
  8. குமாரபாளையம்
    ஜே.கே.கே. நடராஜா கல்லூரியில் நான் முதல்வன், கல்லூரி கனவு திட்ட முகாம்...
  9. லைஃப்ஸ்டைல்
    என்னுள் நிறைந்தவளுக்கு இதயபூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகள்!
  10. லைஃப்ஸ்டைல்
    என்னை ஆள்பவளுக்கு இன்று பிறந்தநாள்..!