/* */

புதிய வேலைவாய்ப்புகளை அடிப்படையாக கொண்டு பாடதிட்டங்கள்: அமைச்சர் கணேசன்

தொழிற்பயிற்சி பள்ளியில் தற்போதைய காலகட்ட வேலை வாய்ப்புகளுக்கு ஏற்ப பாட திட்டங்கள் உருவாக்கப்படும் என்று அமைச்சர் கணேசன் தெரிவித்தார்.

HIGHLIGHTS

புதிய வேலைவாய்ப்புகளை அடிப்படையாக கொண்டு   பாடதிட்டங்கள்: அமைச்சர் கணேசன்
X

ஓரகடம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுடன் உரையாடிய தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் , ஓரகடம் பகுதியில் அமைந்துள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தினை தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் C.V. கணேசன், வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை இயக்குனர் வீரராகவராவ் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உடன் ஆய்வு மேற்கொண்டார்.

தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை , பயிற்சி வகுப்புகள் மற்றும் கட்டமைப்புகள் குறித்து முதல்வரிடம் கேட்டறிந்தார். மேலும் ஆலோசனைக் கூட்டத்தில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்குரிய பாடத்திட்டங்கள் உரிய முறையில் அரசுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் எனவும் கூட்டத்தில் கேட்டுக்கொண்டார்.

அதன்பின் மாணவர்களின் வகுப்பறை மற்றும் அவர்களின் குறைகளை கேட்டறிந்த பின் அரசு மாணவர்களுக்கு மேற்கொண்டு வரும் உதவிகள் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த பயிற்சிகள் குறித்து விளக்கம் அளித்தார்.

அதன்பின் செய்தியாளரிடம் பேசுகையில், தமிழகம் முழுவதும் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் ஆய்வு முடிந்த பின் அதன் அறிக்கை தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

தற்போதைய காலநிலைக்கு ஏற்ப மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்று தரும் புதிய பாட திட்டங்கள் உருவாக்கப்பட்டு மாணவர்கள் வாழ்வில் சிறப்பான இடத்தை அடைய இந்த அரசு அனைத்து உதவிகளையும் மேற்கொள்ளும் என தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது , காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு துறை அலுவலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் படப்பை மணோகரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Updated On: 18 Oct 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!