/* */

காஞ்சிபுரத்தில் நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்த எம்எல்ஏ எழிலரசன்

காஞ்சிபுரம் தாமல்வார் தெரு அங்கன்வாடி மையம் , தாலுக்கா அலுவலக பேருந்து நிழற்குடை , வெங்கடாபுரம் மழைநீர் கால்வாய் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில்  நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்த எம்எல்ஏ எழிலரசன்
X

காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலக நுழைவு வாயில் பேருந்து நிழற்குடை பணிக்கு சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் அடிக்கல் நாட்டிய போது. 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் உத்திரமேரூர் ஸ்ரீபெரும்புதூர் ஆலந்தூர் என நான்கு சட்டமன்ற தொகுதிகளும் ஸ்ரீபெரும்புதூர் காஞ்சிபுரம் என இரு நாடாளுமன்ற தொகுதிகளும் அடங்கி உள்ளது.

சட்டமன்ற உறுப்பினர்கள் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அங்கன்வாடி மையங்கள் அரசு பள்ளி கட்டிடங்கள் சாலைப் பணி பள்ளிகளுக்கு தேவையான மேஜைகள் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுமக்கள் அளிக்கும் தேவைகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட நிதிகளை முக்கிய தேவைகள் கருதி அதன்படி பணிகளை ஒதுக்கீடு செய்வர்.

குறிப்பாக பள்ளிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் அதிக அளவில் நிதி உதவி எப்போதும் அதேபோல் பள்ளிகளுக்கு தேவையான மேஜைகள் கழிவறை உள்ளிட்டவைகளுக்கும் நிதிகள் முக்கியத்துவம் அளிக்கப்படும்.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட தாமல்வார் தெரு பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடி கட்டிடம் மிகவும் பழுதடைந்து மாணவர்கள் ஆபத்தான நிலையிலே இளம் பருவக் கல்வி கற்று வருவதாகவும் , புதிய கட்டிடம் அமைத்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

இதேபோல் காமராஜர் தெருவில் அமைந்துள்ள தாலுகா நுழைவு வாயிலில் பேருந்து நிறுத்தம் உள்ளது. இங்கு அரசு அலுவலகங்கள் அரசு பள்ளிகள் செயல்பட்டு வருவதால் காலங்களில் பயணிகள் பேருந்து நிழற்குடையில் இயலாத நிலை உருவாகும் இதனை புதியதாக கட்டித் தரவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதேபோல் வெங்கடாபுரம் பகுதியில் அங்கன்வாடி மையம் அடிக்கல் நாட்டு விழா, சர்வ தீர்த்த குளம் பகுதியில் காரியமண்டபம் கட்டித்தரக்கோரி கோரிக்கை விடுத்திருந்தனர்.

அவ்வகையில் பொதுமக்கள் கோரிக்கை ஏற்று இன்று காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட மேற்கண்ட பகுதிகளில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய்.50-லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்கான பணி மற்றும் பேருந்து நிறுத்த பயனியர் நிழற்குடை கட்டுவதற்கான உள்ளிட்ட பணியினை காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ சி.வி.எம்.பி.எழிலரசன் அடிக்கல் நாட்டி பணியினை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார்.

இந்நிகழ்வில் மேயர் மகாலட்சுமி யுவராஜ், மண்டல குழு தலைவர்கள் சசிகலா, செவிலிமேடு மோகன், மாவட்ட பொருளாளர் சன் பிராண்ட் ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள் ஏ .எஸ் .முத்து செல்வம் , குமரேசன் பகுதி செயலாளர்கள் திலகர், வெங்கடேசன்,மாமன்ற உறுப்பினர்கள் இலக்கியாசுகுமார் , சுரேஷ், சூர்யா தர்மராஜ் மாநகராட்சி ஆணையர் கண்ணன், பொறியாளர் கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய பணிகளை சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்ததால் அப்பகுதி மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுற்றனர். மேலும் சில கோரிக்கைகளை மனுவாகவும் நேரிலும் தங்கள் குறைகளை தெரிவித்து இதே போல் வரும் காலங்களில் இதனை நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்தனர்.

Updated On: 1 Dec 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  2. உசிலம்பட்டி
    மதுரை காமராஜர் பல்கலைக்கழக கழக துணை வேந்தர் ராஜினமா
  3. ஈரோடு
    ஈரோடு கலை அறிவியல் கல்லூரிக்கு ஏ+ அங்கீகாரம் வழங்கியது நாக் அமைப்பு
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு
  5. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
  6. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  7. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  8. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  10. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !