/* */

மழைநீர் வடிகால்வாய் பணி: குன்றத்தூர், மாங்காடு பகுதிகளில் அமைச்சர் அன்பரசன் ஆய்வு

அமைச்சர் அன்பரசன், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் செந்தில்குமார் மற்றும் ஆட்சியர் கலைச்செல்வி ஆகியோர் மழைநீர் வடிகால்வாய் பணிகளை ஆய்வு மேற்கொண்டனர்.

HIGHLIGHTS

மழைநீர் வடிகால்வாய் பணி: குன்றத்தூர், மாங்காடு பகுதிகளில் அமைச்சர் அன்பரசன் ஆய்வு
X

மாங்காடு பகுதியில் நடைபெற்ற வெள்ள தடுப்பு பணிகளை விளக்கும் பொதுப்பணித் துறையினர்

காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய் பணிகளை இன்று குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனைவர் செந்தில்குமார் மற்றும் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம், கொளப்பாக்கம் ஊராட்சியில், ஒமேகா பள்ளி அருகில், கட்டப்பட்டு வரும் மூடிய வடிகால்வாய் பணிகளையும், பார்வையிட்டு, மணப்பாக்கம் ஊராட்சி, தர்மராஜபுரம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால்வாய் பணிகளையும் குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்,

அதனை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு நகராட்சிக்கு உட்பட்ட ஓம்சக்தி நகரில் கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகால்வாய் பணிகளையும், திரெளபதி அம்மன் கோவில் தெரு மற்றும் லட்சுமிபுரம் மெயின் ரோடு பாலாஜி நகர் ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகால்வாய் பணிகளையும் பார்வையிட்டு, குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம், வரதராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட நெடுஞ்சாலை இடையே அமைக்கப்பட்டு வரும் கீழ்மட்ட கால்வாய் பணிகளையும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர்.

இதேபோல் மலையம்பாக்கம் ஊராட்சி, வசந்தபுரி பகுதி குடியிருப்புகளில் தேங்கியுள்ள மழை நீரை மோட்டார் பம்பு கொண்டு வெளியேற்றப்பட்டு வரும் பணியினை பார்வையிட்டு, குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம், ஐயப்பன்தாங்கல் ஈவிபி பார்க் பகுதிகளில் செயல்பட்டு வரும் மழைநீர் வடிகால்வாய் பணிகளையும், கொளப்பாக்கம் ஊராட்சி இராமகிருஷ்ணா நகரில் தேங்கியுள்ள மழை நீரை மோட்டார் பம்பு கொண்டு வெளியேற்றப்பட்டு வரும் பணியினையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்,

பின்பு சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உபரிநீர் வெளியேற்றப்படுவதையும் பார்வையிட்டு, ஆதனூர் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால்வாய் பணிகளையும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.

இவ் ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், உதவி ஆட்சியர் (பயிற்சி)சங்கீதா, திருப்பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர், சரவணக்கண்ணன், குன்றத்தூர் ஒன்றியக்குழுத்தலைவர் சரஸ்வதி மனோகரன், நீர்வளத்துறை செயற்பொறியாளர் பொதுபணிதிலகம் மற்றும் பொறியாளர்கள், அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Updated On: 2 Dec 2023 12:45 PM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி அருகே, வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஆறு பேர்...
  2. கவுண்டம்பாளையம்
    கோவையில் கனமழையால் சாலைகளில் தேங்கிய வெள்ள நீர் ; வாகன ஓட்டிகள்...
  3. கோவை மாநகர்
    பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு : தலைமறைவான ஓட்டுநர்...
  4. இந்தியா
    நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய 7 வழி...
  5. ஆன்மீகம்
    கொஞ்சம் பாலும் தேனும் கொடுங்க..! அறிவை அள்ளித்தருவார் விநாயகர்..!
  6. இந்தியா
    அரசியல் கட்சி மீது வழக்கில் குற்றம் சாட்டிய அமலாக்கத்துறை: நீதித்துறை...
  7. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  8. ஈரோடு
    ஆபத்தை உணராமல் காட்டாற்று வெள்ளத்தை கடந்த கடம்பூர் மலைக்கிராம...
  9. அரசியல்
    மத்தியில் ஆட்சி அமைக்க மெஜாரிட்டி கிடைத்து விட்டது: அமித்ஷா பேச்சு
  10. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் கொண்டாடும் குதூகல நாள்..! வாழ்த்துங்க..!