/* */

உணவு தேவையா? 24மணி நேரமும் உணவுடன் சுற்றிவரும் சக்ஸஸ் நண்பர்கள் குழு!

காஞ்சிபுரம் நகரில் பசியுடன் இருக்கும் சாலையோர முதியோர்கள் , அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளியின் உறவினர்கள் என அனைவருக்கும் 24 மணி நேரம் உணவுடன் சுற்றித்திரியும் சக்சஸ் நண்பர்கள் குழுவினரால் ஏராளமானோர் பசியாறி வருகின்றனர்..

HIGHLIGHTS

உணவு தேவையா? 24மணி நேரமும் உணவுடன் சுற்றிவரும்  சக்ஸஸ் நண்பர்கள் குழு!
X

ஏழைகளுக்கு உணவு அளிக்கும் வகையில் 24 மணி நேரமும் உணவுடன் சுற்றும் இளைஞர்கள்.

இளைஞர்கள் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌என்றாலே வீணாக பொழுதைக் கழித்து அரட்டை அடிக்கும் நபர்கள் என்பது இன்றுவரை. அனைவரின் பேச்சாகவே உள்ள நிலையில் இவையெல்லாம் காலம் கடந்து போகும் என கூறி தங்களது செயலால் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கிறது காஞ்சி இளைஞர்களின் கூட்டம்.

அதிகாலை ஆரம்பித்து இரவு 10 மணிவரை இளைஞர்கள் சாலைகளில் சுற்றித் திரிவதாக கூறுவது உண்மையே. இவர்கள் சுற்றி வருவது மகிழ்ச்சிக்காக அல்ல.. அனைவரின் பசிக்காக தேடித்தேடி உணவளிக்கும் இளைஞர்களின் கூட்டம்.

ஒரு காலத்தில் காஞ்சிக்குத் சென்றால் காலாட்டிக் கொண்டு சாப்பிடலாம் என பழமொழியை உண்மையாக்கி வேலையில்லா ஊரடங்கு காலத்திலும் ஆதரவற்ற , வருமானத்தை இழந்த குடும்பங்களினா அனைவரின் பசியைப் போக்க நாங்கள் உள்ளோம் என கூறும் சக்ஸஸ் இளைஞர்கள் கூட்டத்தை வியப்புடன் பார்க்கும் நிலை உள்ளது.

இக்குழுவினர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தங்களை அழைக்கும் அனைவருக்கும் பசியாற உணவு அளித்து வருகின்றனர். இரவு நேரங்களில் மருத்துவமனை நோயாளிகளின் உறவினர்கள் , சாலையோரோ முதியோர் , இருளர் குடும்பங்கள் என எவர் அழைத்தாலும் சிட்டாக வாகனங்களில் சென்று உணவளித்து வருகின்றனர்.

வரும் காலம் இளைஞர்களின். காலம் என கூறிய கலாம் நினைவுகளை இன்றும் பின்பற்றும் அனைவரின் நல்லெண்ணங்கள் இருக்கும் வரை மனிதநேயம் மலர்ந்து கொண்டே தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

Updated On: 27 May 2021 6:05 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க