/* */

காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளஸ் -2 பொதுத் தேர்வு எழுதிய 12991நபர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 100சதவீத தேர்ச்சி என மாவட்ட நிர்வாகம் தகவல் வெளியிட்டது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி
X

+2 தேர்வு முடிவுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உடன் வெளியிட்ட மாவட்ட ஆட்சியர் எம். ஆர்த்தி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு எழுதிய 12991 மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அறிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு 6045 மாணவர்களும், 6945 மாணவிகளும் 102பள்ளிகளில் படித்து வந்தனர்.

இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பொது தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு மாணவர்களின் முன் தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என கல்வித்துறை அறிவித்தது.

இன்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 12 ஆயிரத்து 997 மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

இதில் தேர்வு எழுதிய 65 மாற்றுத்திறனாளிகள் மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதுகாஞ்சிபுரம் மாவட்டத்தில் 100 சதவீத தேர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது

Updated On: 19 July 2021 6:15 AM GMT

Related News