/* */

காஞ்சிபுரத்தில் இருளர் இன மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா: ஆட்சியர் வழங்கல்

காஞ்சிபுரம் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் பட்டா , பாதுகாவலர் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வழங்கினார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் இருளர் இன மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா: ஆட்சியர் வழங்கல்
X

மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு நலத்திட்டப் பணிகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் மா.ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து இன்று 322 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வருவாய்த்துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மூன்று நபர்களுக்கும், உத்திரமேரூர் வட்டத்தை சார்ந்த மூன்று நபர்களுக்கும், வாலாஜாபாத் வட்டத்தைச் சேர்ந்த மூன்று நபர்களுக்கும், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், செல்வபெருமாள் நகர் பகுதியைச் சார்ந்த 26 இருளர் இன மக்கள் ஆகியோருக்கு இலவச வீட்டு மனை பட்டா மற்றும் 7 பழங்குடியினர் நபர்களுக்கு, பழங்குடியினர் நல வாரிய அட்டைகளும், மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி வழங்கப்பட்டது.

மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஐந்து மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டபூர்வமான பாதுகாவலர் நியமன சான்றுகள் (legal guardianship certificate) மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா.ஆர்த்தி வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ரவிச்சந்திரன் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அலுவலர் குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 4 April 2022 8:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலில் மினுமினுக்கும் சரும் வேண்டுமா? கவலையை விடுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    ஈருள்ளம் ஓருள்ளமாகி ; சீரோடு சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்..!
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு
  4. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி அருகே, வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஆறு பேர்...
  5. ஈரோடு
    சத்தி, புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகள்:...
  6. கவுண்டம்பாளையம்
    கோவையில் கனமழையால் சாலைகளில் தேங்கிய வெள்ள நீர் ; வாகன ஓட்டிகள்...
  7. கோவை மாநகர்
    பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு : தலைமறைவான ஓட்டுநர்...
  8. இந்தியா
    நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய 7 வழி...
  9. ஆன்மீகம்
    கொஞ்சம் பாலும் தேனும் கொடுங்க..! அறிவை அள்ளித்தருவார் விநாயகர்..!
  10. இந்தியா
    அரசியல் கட்சி மீது வழக்கில் குற்றம் சாட்டிய அமலாக்கத்துறை: நீதித்துறை...