/* */

50 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டு பழுதடைந்த கிராம சங்கு புத்துயிர் பெற்றது

திருப்புட்குழி கிராம ஊராட்சியில் 50 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்ட பழுதடைந்த கிராம சங்கு , புதுப்பிக்கப்பட்டு மீண்டும் நிறுவப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

50 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டு பழுதடைந்த  கிராம சங்கு  புத்துயிர் பெற்றது
X

திருப்புக்குழி கிராம ஊராட்சியில் பழுதடைந்து சீரமைக்கபட்ட பயன்பாட்டுக்கு வந்த சங்கு கட்டிடம் .

முன்னோர்கள் காலத்தில் கிராமங்களில் விவசாயப்பணி , வெளி ஊர் சந்தை வியாபாரத்திற்கு செல்ல , கால நேரம் அறிய என பலவற்றிக்கு பெரிதும் உதவியது சங்கொலி. கிராமத்தின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டு பல கால நேரங்களில் ஒலி எழுப்பி அக்கிராமம் மட்டுமில்லாமல் அதை சுற்றியுள்ள பல கிராமங்களிலுள்ள பொதுமக்களுக்கு உதவியது.

காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழி ஊராட்சியில் கடந்த 1962-ஆம் ஆண்டு அப்போதைய சட்டமன்ற உறுப்பினரான திரு எஸ் வி நடேச முதலியார் அவர்களால் மக்கள் பயன்பாட்டிற்கு அமைக்கப்பட்டு தொடங்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த பல வருடங்களாக உபயோகமிலலாமல் இருந்து வந்தது. அங்கு ஊர் கிராம மக்கள் பலமுறை முயற்சித்தும் இதை பயன்பாட்டிற்கு கொண்டு வர இயலாத நிலை தொடர்ந்து இருந்து வந்தது.

தற்போது புதியதாக பொறுப்பேற்க பட்ட கிராம ஊராட்சி மன்றம் தலைவர் சுகுணாமேரி , துணைத்தலைவர் அன்பு மற்றும் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் கூட்டத்தில் இதனை புதுப்பிக்கும் பணியை துவங்க முடிவு செய்யப்பட்டு பழுது பார்க்கும் பணி தொடங்கியது.

பணி நிறைவுற்ற நிலையில் அதை பொருத்தும் பணி கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த இன்று முதல் இதன் பயன்பாடு மீண்டும் வந்துள்ளது. இந்த சங்கு ஒலியைக் கேட்ட பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து பாரம்பரிய பொருட்கள் மற்றும் அதன் பயன்பாடு பெரிதும் இப்பகுதிக்கு தற்போதும் பயன்படும் என தெரிவித்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 16 Dec 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  2. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  3. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  4. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  5. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  6. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  7. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர்...
  9. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  10. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...