/* */

புதிய இளம் வாக்காளர்களை உறுப்பினராக்குங்கள்: மாவட்ட திமுக செயலாளர்

காஞ்சிபுரத்தில் புதிய இளம் வாக்காளர்களை திமுக உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்று தொற்கு மாவட்ட திமுக செயலாளர் சுந்தர் எம்எல்ஏ தெரிவித்தார்.

HIGHLIGHTS

புதிய இளம் வாக்காளர்களை உறுப்பினராக்குங்கள்: மாவட்ட திமுக    செயலாளர்
X

காஞ்சிபுரம் நகர திமுக கூட்டத்தில் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பேசுகிறார்.

காஞ்சிபுரம் நகர திமுக பொது உறுப்பினர் கூட்டம் காஞ்சிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.

இதில் காஞ்சிபுரம் நகரத்தில் உள்ள 51 வட்டங்களை சேர்ந்த நகர திமுக உறுப்பினர்கள் மகளிர் அணியினர் உள்ளிட்ட அனைத்து பிரிவு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம் , காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி எழிலரசன் , காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர் ஆகியோர் தொண்டர்களுக்கு ஆலோசனை வழங்கினர்.

மாவட்ட கழக செயலாளர் க.சுந்தர் பேசுகையில், விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றி பெற திமுக உறுப்பினர்கள் சேர்க்கை வெகு முக்கியம் எனவும் தற்போது புதிதாக வாக்காளர் பட்டியலில் இணைந்து உள்ள இளம் வாக்காளர்களை திமுக உறுப்பினர் களாக இணைக்க வேண்டும்.

வரும் தைப்பொங்கல் தினத்தை தமிழகத்தில் தமிழ்ப்புத்தாண்டு நாளாக கொண்டாட அனைத்து வட்ட கழகத்திலும் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்க வேண்டும் எனவும்,

கல்லூரிகள் தோறும் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்த மாணவரணியுடன் இணைந்து அனைவரும் செயல்பட வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டனர்.

மேலும் திமுக கழகம் மேற்கொண்ட திட்ட பயன்கள் குறித்த துண்டு பிரசுர அறிக்கைகளை புதியதாக இனையவுள்ள உறுப்பினர்களுக்கு வழங்கி இணைக்க வேண்டும் என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள் சந்துரு, ஜெகநாதன் உள்ளிட்ட பல்வேறு நகர நிர்வாகிகள் கழக உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 4 Jan 2022 1:25 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஈருள்ளம் ஓருள்ளமாகி ; சீரோடு சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்..!
  2. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி அருகே, வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஆறு பேர்...
  3. ஈரோடு
    சத்தி, புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகள்:...
  4. கவுண்டம்பாளையம்
    கோவையில் கனமழையால் சாலைகளில் தேங்கிய வெள்ள நீர் ; வாகன ஓட்டிகள்...
  5. கோவை மாநகர்
    பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு : தலைமறைவான ஓட்டுநர்...
  6. இந்தியா
    நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய 7 வழி...
  7. ஆன்மீகம்
    கொஞ்சம் பாலும் தேனும் கொடுங்க..! அறிவை அள்ளித்தருவார் விநாயகர்..!
  8. இந்தியா
    அரசியல் கட்சி மீது வழக்கில் குற்றம் சாட்டிய அமலாக்கத்துறை: நீதித்துறை...
  9. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  10. ஈரோடு
    ஆபத்தை உணராமல் காட்டாற்று வெள்ளத்தை கடந்த கடம்பூர் மலைக்கிராம...