/* */

டீசல் , பெட்ரோல், சொத்துவரி உயர்வு கண்டித்து மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தில் இரு சக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்து , தொண்டர்கள் நாமம் போட்டு மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.

HIGHLIGHTS

டீசல் , பெட்ரோல், சொத்துவரி உயர்வு கண்டித்து மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம்
X

காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகம் எதிரே மக்கள் நீதி மய்யம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே மக்கள் நீதி மய்யம் சார்பில் மாநில செயலாளர் எஸ் கே பி பி கோபிநாத் தலைமையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், சமையல் எரிவாயு, சொத்துவரி உயர்வை கண்டித்தும், மத்திய, மாநில அரசுகள் பொருளாதார கொள்கையை சரிவர வரையரை செய்யாமலும், பல்வேறு செயல்திட்டங்களை மேம்படுத்தாமலும் மக்கள் துயரம் அடையும் வகையில் பல்வேறு வரி விதிப்புகளை எடுத்து வருவதாகவும், வாக்களித்த மக்களுக்கு வரி உயர்வை பரிசாக அளிக்கும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது, பல்வேறு கோஷங்கள் எழுப்பி இருசக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்து அபாய குலவை சத்தம் எழுப்பி நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றன.

இந்த ஆர்பாட்டத்தில் மக்கள் நீதி மையம் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் கண்ணன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் மக்கள் நீதி மைய தொண்டர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர்

Updated On: 9 April 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    மின்சாரம்,குடிநீர் தட்டுப்பாடு : பொதுமக்கள் சாலை மறியல்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் தரும் முருங்கைக் கீரை சூப் செய்வது எப்படி?
  3. உலகம்
    இன்னலுறும் நோயாளிகளுக்கு உதவும் செவிலியரை போற்றுவோம்..! நாளை செவிலியர்...
  4. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...
  5. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
  6. நாமக்கல்
    நாமக்கல் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100...
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  8. நாமக்கல்
    மோகனூர், பரமத்தி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள்: ஆட்சியர் ஆய்வு
  9. ஈரோடு
    பவானி பகுதியில் 15 கிலோ அழுகிய பழங்கள் பறிமுதல்
  10. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை