/* */

நடமாடும் தடுப்பூசி செலுத்தும் வாகனத்தை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தொடங்கி வைத்தார்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் விடுபட்ட பகுதிகள் மற்றும் கிராமங்களுக்கே நேரடியாக சென்று தடுப்பூசி செலுத்தும் வாகனத்தை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

நடமாடும் தடுப்பூசி செலுத்தும் வாகனத்தை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தொடங்கி வைத்தார்
X

காஞ்சிபுரத்தில் நடமாடும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் வாகனத்தை கலெக்டர் ஆர்த்தி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை உருவாகி நாள்தோறும் ஆயிரக்கானக்ணோர் பாதிப்பு அடைந்து சிகிச்சை பெற்று வந்தனர். பரவலை தடுக்கும் நோக்கில் மத்திய மாநில அரசுகள் பொதுமக்களை தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாம்களில் இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ளனர்.

இந்நிலையில் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் பட்டு குழுமம் சார்பில் 15 லட்சம் மதிப்பிலான ஆம்புலன்ஸ் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி நடமாடும் தடுப்பூசி செலுத்தும் வாகனமாக மாற்ற அறிவுரை வழங்கினார்.

இதனை அடுத்து காஞ்சி மாவட்ட சுகாதார நலப் பணிகள் நகரிலுள்ள சிறு பகுதிகளில் சென்று அனைத்து தரப்பு மக்களும் தடுப்பூசி செலுத்தி கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டு இன்று அதனை மாவட்ட ஆட்சியர் எம்.ஆர்த்தி துவக்கி வைத்தார்.

நாளை முதல் ஒருவரம் நகராட்சி உள்ள விடுபட்ட பகுதிகளிலும் , அதனை எடுத்து போக்குவரத்து வசதி இல்லாத கிராமங்களுக்கு நேரடியாக சென்று அங்கு முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா பன்னீர்செல்வம் , மாவட்ட சுகாதார நலப் பணிகள் துணை இயக்குனர் மருத்துவர் பழனி, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை இணை இயக்குனர் மருத்துவர்.ஜீவா உள்ளிட்டோர் இருந்தனர்.


பட விளக்கம் : நடமாடும் தடுப்பு ஊசி செலுத்தும் வாகனத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். உடன் ஞ்மாவட்ட வருவாய் அலுவலர் இரா பன்னீர்செல்வம் , மாவட்ட சுகாதார நலப் பணிகள் துணை இயக்குனர் மருத்துவர் பழனி, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை இணை இயக்குனர் மருத்துவர்.ஜீவா உள்ளிட்டோர் இருந்தனர்

Updated On: 5 July 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  2. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  3. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  4. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?
  5. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை
  8. திருவள்ளூர்
    மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு!
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  10. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து