/* */

கொரோனா : இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் 185 நோய் தொற்று பாதிப்பு உறுதி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 185 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சைக்குப்பின் 25 பேர் வீடு திரும்பினர்.

HIGHLIGHTS

கொரோனா : இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் 185 நோய் தொற்று பாதிப்பு உறுதி
X

தமிழகத்தில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, இன்று முதல், இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தவுள்ளது. மேலும் அனைத்து மாவட்ட ஆட்சியருக்களுக்கும் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தி நடவடிக்கைகளை கண்காணிக்க உத்தரவிடபட்ட து.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஒன்றாம் தேதி 35 நபர்களும், இரண்டாம் தேதி நாற்பத்தி ஏழு நபர்களும் என இருந்த நிலையில், இன்று ஒரே நாளில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 185 நபர்கள் தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். காஞ்சிபுரம் ஒன்றியத்தில் 23 பேர்களும், மாநகராட்சி 21 நபர்களும், ஸ்ரீபெரும்புதூரில் 25 நபர்களும், குன்றத்தூரில் 109 நபர்களும், இதர 7 பேர் என மொத்தம் 185 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிகிச்சை பெற்றுவந்த 25 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டம் முழுவதும் தொடர்ந்து தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு போடப்பட்டு வந்தாலும் தொடர்ந்து வைரஸ் தொற்று அதிகரித்து வருவது காஞ்சிபுரம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வருவாய்த்துறை மற்றும் காவல்துறை , மாநகராட்சி ஊழியர்கள் என பல துறையினர் முக கவசம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

Updated On: 6 Jan 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க