/* */

காஞ்சிபுரம் : கொரோனா தொற்று தடுப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் எம். ஆர்த்தி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது..

HIGHLIGHTS

காஞ்சிபுரம் : கொரோனா தொற்று தடுப்பு   குறித்து  மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்
X

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, தலைமையில் நடைபெற்றது.

இதில் பேசிய மாவட்ட ஆட்சியர் , கடந்த ஒரு வார காலமாக நோய் பரவல் குறைந்து தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தும் , சிகிச்சையில் இருந்து வீடு திரும்பும் போது எண்ணிக்கை பலமடங்காக உயர்ந்து உள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் நோய் பரவலை தொடர்ந்து கட்டுப்படுத்த அரசு அறிவித்துள்ள அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி துப்பு இல்லா மாவட்டமாக காஞ்சிபுரம் மாவட்டத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.எம்.சுதாகர் , மாவட்ட வருவாய் அலுவலர்கள் இரா.பன்னீர்செல்வம், மா.நாராயணன் (தேசிய நெடுஞ்சாலை), கே.மணிவண்ணன் (விமான நிலைய விரிவாக்க திட்டம்), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பி.ஜெயசுதா, இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) மரு.ஜீவா, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.பழனி மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 17 Jun 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    யானை வழித்தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற வேண்டும் : விவசாயிகள்...
  2. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு ||...
  3. கோவை மாநகர்
    ஆனைமலையில் குடும்பத்துடன் உறங்கும் காட்டு யானைகளின் புகைப்படம் வைரல்
  4. லைஃப்ஸ்டைல்
    அடே..நண்பா.. வாடா பிறந்தநாள் கொண்டாடலாம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைச் சோர்வில் இருந்து மீண்டு வர 9 வழிகள்
  6. கோவை மாநகர்
    நொய்யல் ஆற்றில் நுரையுடன் வெளியேறும் வெள்ள நீர் ; நோய் தொற்று பரவும்...
  7. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்
  8. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...
  9. லைஃப்ஸ்டைல்
    "குட் நைட்" மட்டும் சொல்லாதீங்க! தமிழ்ல இப்படி சொல்லுங்க!
  10. வீடியோ
    மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை ! 50 ஆண்டுகள் பழமையான புளியமரம்...