/* */

உணவு பாதுகாப்பு துறை சார்பில் உத்திரமேரூரில் வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம்

உணவு பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் உரிமம் பதிவு செய்தல் குறித்த விழிப்புணர்வு கூட்டம் காஞ்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் அனுராதா தலைமையில் நடைபெற்றது

HIGHLIGHTS

உணவு பாதுகாப்பு துறை சார்பில் உத்திரமேரூரில் வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம்
X

உணவு பாதுகாப்பு துறையும் விதிமுறைகள் மற்றும் பதிவு உரிமம் புதுப்பித்தல் உள்ளிட்டவை குறித்த விளக்கங்களை வியாபாரிகளுக்கு எடுத்துரைத்த அலுவலர் டாக்டர் அனுராதா

காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் உத்திரமேரூர் பகுதியில் உணவு பொருள் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கான உணவு பாதுகாப்பு உரிமம், பதிவு சான்று மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நாமக்கலில் 13 வயது பள்ளி சிறுமி ஷவர்மா சாப்பிட்டு உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்பு துறை சார்பில் அதிரடி ஆய்வுகள் உணவகங்களில் நடைபெற்று வருகிறது.

மேலும் அனைத்து வகை வியாபாரிகளுக்கும் இதுகுறித்த விழிப்புணர்வு அளிக்க உணவு பாதுகாப்பு துறை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது.

அவ்வகையில் இன்று உத்திரமேரூர் பகுதி அனைத்து வியாபாரிகள் முன்னேற்றம் சங்கம் சார்பில் உணவுப்பொருள் தயாரிப்பாளர்கள் மட்டும் விற்பனையாளர்களுக்கான உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு சான்று பெறுவதற்கான சிறப்பு முகாம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் அனுராதா தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கலந்து கொண்ட உத்திரமேரூர் அனைத்து உணவு பொருட்கள் விற்பனையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள்.

இதில் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் கீழ் உணவு வணிகம் செய்வோர் அனைவரும் அரசு உரிமம் மற்றும் பதிவுச் சான்று பெற்றிருத்தல் கட்டாயம் என்றும் ஏற்கனவே பெற்று இருந்தால் முறையாக புதுப்பித்தல் அவசியம் என்றும் இதை மீறி அவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தெரிவித்தார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உணவகம் , பேக்கரி, துரித உணவகம் மெடிக்கல்ஸ் , மளிகை கடை , மாவு கடை தள்ளுவண்டி, சாலை ஓர கடைகள், பால் வியாபாரம் மற்றும் உணவு சம்பந்தப்பட்ட வணிகம் செய்வோர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை பெற்றனர். மேலும் உணவு மேற்பார்வையாளருக்கான பயிற்சி சிறப்பு வகுப்புகளும் நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் உத்திரமேரூர் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் அமுதா , வியாபாரிகள் சங்க தலைவர் செல்வகுமார் , செயலாளர் சேகர் , பொருளாளர் திருநாவுக்கரசு துணைத் தலைவர் ஜாகிர் உசேன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 23 Sep 2023 9:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  2. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  3. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  4. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  5. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  6. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  9. வீடியோ
    Ameer-ன் படம் பார்க்க Annamalai-யை அழைத்தோம் !#annamalai #annamalaibjp...
  10. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்