உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!

உலக அளவிலான மாற்றம் :   புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
X

செய்திக்கான மாதிரி படம்(கோப்பு படம்) 

உலக அளவில் நிறைய விஷயங்களில் மாற்றம் வந்து கொண்டு இருக்கின்றது.

உலக அளவில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை எல்லாம் கவனிக்காமல் நம்மூரில் உள்ள சமூக வலைத்தள பக்கங்களில் தேவையற்ற விஷயங்களை விடாமல் விவாதித்துக்கொண்டு இருக்கிறோம்.

உலக அளவில் இந்தியா முட்டி மோதி முன்னேறிக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சி என்பது பட்டு விரித்த மென்பாதை இல்லை. முட்கள் நிறைந்த, சடுதியில் புதைக்குழியில் தள்ளிவிடும் நயவஞ்சகர்கள் சூழ்ந்த பாதை இது. இவற்றை எல்லாம் கடந்து வெற்றிகொள்ளும் சமயத்தில் உலகின் அரசியல் பார்வையே மாற்றம் கண்டிருக்கும் என அனுமானிக்கிறார்கள் உலக அரசியல் பார்வையாளர்கள்.

அப்படி என்ன தான் செய்து கொண்டு இருக்கிறது நம் தேசம்? இந்த மண்ணுக்கும், இந்த மண்ணில் தோன்றிய மக்களுக்கும் தனிப்பெருமை உண்டு என உலகம் சொல்கிறது.

நம் மண்ணுக்கு என்றே தனிப்பட்ட பெருமை உண்டு என்பது இந்த உலகிற்கு பல முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. உலக அளவிலான பெரும் நோய் தொற்று தாக்கத்தின் போதும் சரி, அதில் இருந்து சிலிர்த்து, மீண்டெழுந்த வெகு சில தேசங்களில் இந்தியாவும் ஒன்று. வல்லரசு தேசங்களே தடுமாறிய தருணத்தில் இந்தியா இதனை சாதித்துக்காட்டியது தான் ஆச்சரியம்.

ஒரு நாட்டின் வல்லமைக்கு அதன் பொருளாதார வளர்ச்சி, அதன் உள் கட்டமைப்பு வசதிகள் என்பது அடிப்படை ஆதாரங்கள். இன்றைய தேதியில் அமெரிக்காவுக்கு அடுத்த படியாக சீனாவில் தான் சாலை போக்குவரத்து வசதிகள் அதிகம் ஏற்படுத்தப்பட்ட ஒன்றாக இருந்தது. அமெரிக்கா இதனை 1960 களில் முன்னெடுத்த திட்டமிடல். சீனாவில் 2010 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிடல். ஆனால் நாம் 2017 ஆண்டிற்கு பிறகே இதில் கவனம் செலுத்த முடிந்தது.

ஆனால் இன்று உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, சீனாவை பின்னுக்குத் தள்ளி நூறு கிலோமீட்டர்கள் கொண்ட தொலைவிற்கு உள்ள ஆறு வழி சாலையை வெறும் நூறு மணிநேரத்தில் போடும் அளவிற்கு முன்னேற்றம் கண்டு அசத்தியிருக்கிறது இந்தியா.

என்ன ஒன்று, இது குறித்து நம்மில் பலரும் அறிந்திருப்பதில்லை. இது மாத்திரமல்ல. உலகமே சீனாவின் (BRI) பெல்ட் அண்ட் ரோட் இன்ஷியேட்டிவ் பற்றி பெரும் அச்சத்தோடு விவாதிக்க கொண்டு இருக்க (இது தான் சீனாவின் பொருளாதார பட்டுப் பாதை திட்டத்தின் ஓர் பகுதி என்பதை அறிக.....) நம்மவர்கள் BRO வில் பெரும் கவனம் செலுத்தினார்கள் . பார்டர் ரோடு ஆர்கனைசேஷன் என்பதின் சுருக்கம் தான் BRO.

இந்திய ராணுவ துணை அமைப்பாகவே பார்க்கப்படும் இது, சமீபத்தில் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதாவது வானத்தை தவிர வேறு எங்கு வேண்டுமானாலும் பாதை அமைப்போம் என்று சொல்லி இருக்கிறார்கள். கடந்த ஆறு ஆண்டுகளில் மகத்தான பல கட்டுமான சாதனைகளை படைத்து அசத்தி இருக்கிறார்கள் இவர்கள். நம் இந்திய தேசத்தின் வடக்கில் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மூலை முடுக்கிலெல்லாம் சாலை போக்குவரத்தை கொண்டு வந்து இருக்கிறார்கள். பெரிய பெரிய மலைகளில் சமீபத்தில் பிரதமர் திறந்து வைத்த டணல்களில் எல்லாம் சாலையை ஏற்படுத்தியது இந்த அமைப்பினர் தான். நம் இந்திய தேசம் சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு இது ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது என்பது தான் கூடுதல் சிறப்பு அம்சம்.

இது என்ன பிரமாதம் என்பவர்களுக்கு, சீனாவின் பொருளாதார பட்டுப் பாதை திட்டத்தை கண்டு அமெரிக்காவே அலறிய தருணங்கள் உண்டு. ஜோபைடன் ஆட்சிக்கு வந்த புதிதில் சீனாவின் BRI க்கு எதிராக B3W என ஒன்றை முன்னெடுத்தார். பில்ட் பேக் பெட்டர் வேர்ல்டு என்பதன் சுருக்கம் தான் இந்த B3W. ஏகப்பட்ட பொருட் செலவு பிடிக்கும் திட்டமிடல் இது.

பெரிய அண்ணன் மனப்பான்மையில் பல ஐரோப்பிய தேர்தல்களில் எல்லாம் இதற்கு நிதி கொடுக்க வேண்டும். அமெரிக்கா இதனை நிர்வகிக்கும் என்றதும் தான் பலரும் ஜகா வாங்கினார்கள். பலரும் ஏளனம் செய்த நிலையில், குறிப்பாக அமெரிக்க மண்ணிலேயே பகடி செய்து மூக்குடைந்த நிலையில் ஏற்பட்ட கடுப்பில் தான் ரஷ்யா உக்ரைன் போரை முன்னெடுத்தது பைடன் அரசு என்பவர்களும் உண்டு.

இஃது நுட்பமாக இந்தியாவை பதம் பார்த்தது அமெரிக்கா. நீங்கள் யார் பக்கம் என கேட்டு மல்லுக்கு நின்றது. நாம் பேசாத நிலையில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று மறுதலித்த இடத்தில் சற்று கவனித்தால் இதன் பின்னணியில் தான் இங்கு பஞ்சாப்பில் விவசாய சங்கங்கள் பெயரில் போராட்டம் எல்லாம் நடந்தது என்பதை நாம் அத்தனை சுலபத்தில் மறந்து விடக் கூடாது.

கொரோனாவிற்கு பிறகான பெரும் நெருக்கடியான நேரம் இந்தியாவிற்கு இருந்தது என்றால் அது இது தான். இந்திய தேசத்திற்கு... அப்போது நேரிடையாக பைடனை கண்டிக்கவோ பகைக்கவோ இருந்த வாய்ப்பு மிக மிக குறைவு. காரணம் அங்கே வாழும் அமெரிக்க இந்தியர்கள். இத்தனைக்கும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் அனைவருக்கும் நம் இந்திய பிரதமர் மீது அளவு கடந்த மரியாதை உண்டு.

ஆனால் அங்கு அவர்களுக்கு டொனால்ட் ட்ரம்ப் ஆகாது. H1B விசா கொடுக்க மறுக்கிறார் என்கிற குற்றச்சாட்டு உண்டு. இவர்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்த ஜோபைடனுக்கோ நம் இந்திய தேசம் எட்டிக்காய். அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பாகிஸ்தான் தேசமே கொண்டாடியது என்றால் நீங்களே யூகித்து கொள்ளுங்கள். பாகிஸ்தானிய உயரிய விருதை அவர் துணை ஜனாதிபதியாக இருந்த காலத்திலேயே கொடுத்திருக்கிறது பாகிஸ்தானிய உயர் மட்டம்.

அப்படி ஒரு சூழ்நிலையில் நம்மவர்களின் நிலை குறித்தும் எத்தகையதொரு கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டு சமாளித்து இருக்க வேண்டும் என்பதை எல்லாம் உங்கள் முடிவுகளுக்கே விட்டு விடுகிறோம். இந்த இடத்தில் மற்றோர் விஷயத்தையும் கவனிக்க வேண்டும்.

சீனாவின் BRI, அமெரிக்காவின் B3W ஆகியவற்றுக்கு இடையில் நம்மவர்கள் INSTC என்பதை முன்னெடுத்தனர். இது எத்தனை பேருக்கு தெரியும் சொல்லுங்கள் பார்க்கலாம். இன்டர்நேஷனல் நார்த் - சௌத் டிரான்ஸ்போர்ட் காரிடர் என்பதின் சுருக்கம் தான் இந்த INSTC. ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் தொடங்கி நம் இந்திய மேற்கு துறைமுகத்திற்கு இணைப்பினை ஏற்படுத்தும் திட்டமிடல் இது.

இதில் சாலை, ரயில் மற்றும் கடல் மார்க்கமாக சரக்கு போக்குவரத்தை ஏற்படுத்த வேண்டும். சாதாரணமாக ரஷ்யாவில் உள்ள இந்த துறைமுகத்தில் இருந்து நம் இந்திய துணைக்கண்டத்தில் உள்ள துறைமுகங்களை அடைய குறைந்த பட்சம் 83 நாட்கள் பிடிக்கும்.ரஷ்ய கருங்கடல் மற்றும் செங்கடல் ஊடாகவும் உலகளாவிய கடல் போக்குவரத்து நெரிசலை சமாளித்து வர வேண்டி இருக்கும்.

ஆனால் இந்த திட்டத்தின் படி பயணத்தை மேற்கொண்டால் பயண நேரம் பாதிக்கு பாதியாக குறையும் என மதிப்பீடு செய்திருக்கிறார்கள். இதில் சரக்கை தரை மார்க்கமாக சில இடங்களில்.... ரயில் போக்குவரத்தாக சில இடங்களில்... பின்னர் ஈரானிய சபஹார் துறைமுகத்திற்கு வந்து பின்னர் கப்பல் போக்குவரத்தில் தான் பயணம் செய்ய வேண்டும் என்கிற போது கையாளும் செலவு அதிகரிக்கும் என்று பலரும் ஆரூடம் சொல்லிக் கொண்டு இருந்தார்கள்.

நம்மவர்கள், யோசித்து கொண்டு இருக்கவில்லை வெற்றிகரமாக சாதித்து காட்டியிருக்கிறார்கள். இப்படி ஒரு சரக்கு போக்குவரத்தை முன்னெடுத்து வெற்றிகரமாக குஜராத் மாநிலத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்திற்கு 37 நாட்களில் கொண்டு வந்து சேர்த்து அசத்தி இருக்கிறார்கள். செலவு தொகையில் சுமார் சற்றேறக்குறைய 40% மிச்சமும் பிடித்து இருக்கிறார்கள்.

உலகின் பொருளாதார வல்லமை கொண்ட நாடுகளில் எல்லாம் பெரும் அதிர்வலைகளை இது ஏற்படுத்திருக்கிறது . வரவிருக்கும் நாட்களில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அநேகமாக இது சீன அதிபர் ஜிங்பிங்கை ஒரு கலக்கு கலக்கி இருக்கும். ஏனெனில் இது அவருக்கு இருபது ஆண்டுகள் கனவு திட்டம் இது. இன்றைய தேதி வரை அவர் முன்னெடுத்த BRI திட்டத்தை முழுமையாக முடித்து செயல்பாட்டிற்கு இன்னமும் கொண்டு வர முடியவில்லை. இதில் செய்திருக்கும் முதலீடுகளை மீட்டெடுக்கும் வழிவகையும் தெரியவில்லை.

இப்படியான நிலையில்..... ஏகப்பட்ட தடைகள் உண்டாக்கியும் நம் இந்திய தேசம் அசால்ட்டாக இதனை சாதித்து காண்பித்து இருக்கிறது. இத்தனை இடர்பாடுகளுக்கு மத்தியில் முன்னெடுக்கப்பட்டதில் கூட செலவு தொகையை மிச்சம் பிடித்திருக்கிறார்கள் என்பதை பலரை பீதியில் ஆழ்த்தியிருக்கிறது.

ஏனெனில்.......இன்றைய தேதியில் மத்திய தரைக்கடல் பகுதியில்..... அரபு நாடுகளில் விமானப் போக்குவரத்து என்பது உலகளாவிய முனையமாக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கிறது. இதன் பிறகு தரை மார்க்கமாகவும் கடல் மார்க்கமான சரக்கு போக்குவரத்து கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறக்கூடிய இடத்திற்கு வந்து விடும் என்று மதிப்பீடு செய்திருக்கிறார்கள். இதில் நம்மவர்களின் பங்களிப்பு மிக பெரிய அளவில் இருக்கும் என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்......

ஏற்கனவே சவுதி மும்பையை இணைக்கும் கடலடி புல்லட் ரயில் திட்டங்களை வகுத்து செயல்பட்டு வரும் நிலையில் சரக்கு போக்குவரத்து திட்டமிடல் என்பது மிக பெரிய பாய்ச்சலாக மாற இருக்கிறது. அதேசமயம் இவையெல்லாம் அமெரிக்காவில் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய பங்களிப்பு, டாலர் தேவைப்பாடு குறைப்பு, அரபு தேசங்களின் கூட்டமைப்பு என்கிற பல முனை செயல்பாட்டில் இந்தியா முன்னெடுக்கும் இந்த திட்டமிடலை அது செயல்படுத்தும் வேகத்தை அவர்களால் ஜீரணிக்கவே முடியாத நிலையில் தத்தளித்து வருகிறார்கள்.

இந்த திட்டங்களுக்கான மூலதன முதலீடு என்பதே பல அமெரிக்கர்கள் தான். அரபு உலக பெரும் முதலாளிகளோடு சேர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் என்பது தான் இதில் உள்ள ராஜதந்திர அம்சமாக இருக்கிறது. அரபு உலக நாடுகளில் சுற்றுலா மட்டுமே பெரும் வருவாய் ஈட்டும் நிலையில் அதனை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருக்கிறது. அதனால் செய்கிறார்கள். கச்சா எண்ணெய் வர்த்தகம் என்பது காலப் போக்கில் குறையும் என்பதால் இதனை அவர்கள் முன்னெடுத்து செயல்படுத்தி வருகிறார்கள். இந்த நாடுகளில் உள்ள பெரும் முதலீடுகள் எல்லாம் மறைமுகமாக அமெரிக்கர்களுடையது என்கிறார்கள்.

அப்படி என்றால் நம்மவர்களின் கணக்கு என்றுமே பொய்த்ததில்லை. புகுந்து புறப்பட ஆரம்பித்திருக்கிறார்கள். அடுத்த ஐந்தாண்டுகளில் யூகித்து புரிந்து கொண்டவர்கள் பாக்கியவான்கள். பார்க்கலாம். இதில் யாரெல்லாம் வருகிறார்கள் என்று !!!!??

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!