/* */

காஞ்சிபுரம் அருகே சாலை விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழப்பு

காஞ்சிபுரம் அருகே சாலை விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் அருகே சாலை விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
X

விபத்தில் உயிரிழந்தவர்கள்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுக்கா, செ.நாச்சிபட்டு பகுதியைச் சேர்ந்த ராமஜெயம், தனது சித்தப்பா மகன் ராஜேஷ் உடன் சென்னைக்கு வந்து, மாமனார் வீட்டில் பிரசவத்திற்கு வந்து தங்கி இருந்த தனது மனைவி ரத்னா, மகள்கள் ராஜலட்சுமி, தேஜாஸ்ரீ, மற்றும் 6 மாத கைக்குழந்தை ஆகியோரை ராமஜெயம் காரில் அழைத்துக் கொண்டு, சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

காஞ்சிபுரம் அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது சித்தேரி மேடு பகுதியில் பழுதாகி சாலை ஓரம் நின்றிருந்த சரக்கு லாரி மீது ராமஜெயம் ஒட்டி வந்த கார் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் கார் முழுவதும் நசுங்கிய நிலையில் ராமஜெயத்தின் மனைவி ரத்னா, மற்றும் 3 குழந்தைகள் சகோதரர் ராஜேஷ், ஆகிய 5 பேரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.

காரை ஓட்டி வந்த ராமஜெயம் படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த பாலு செட்டி சத்திரம் போலீசார் உயிரிழந்த ஐந்து பேரையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 5 Jun 2023 8:06 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க