/* */

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 17.48 லட்சம் வாக்காளர்கள்

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகள் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது

HIGHLIGHTS

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 17.48 லட்சம் வாக்காளர்கள்
X

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அலுவலரும் , காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்  கலைச்செல்வி

தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது.

இதற்கு முன்பே கடந்த மூன்று மாத காலமாகவே நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தமிழக தேர்தல் ஆணையம் துவக்கி வாக்காளர் சேர்த்தல் நீக்கல் இடமாற்றம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான சிறப்பு முகாம்களை தமிழக முழுவதும் நான்கு கட்டங்களாக நடத்தியது.

அதனைத் தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியல் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர்கள் வெளியிடப்பட்டு அது குறித்தும் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் தற்போது இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அவ்வகையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 8 லட்சத்து 53 ஆயிரத்து 456 ஆண்‌ வாக்காளர்களும் , 8 லட்சத்து 95 ஆயிரத்து 107 பெண் வாக்காளர்களும் , 303 இதர வாக்காளர்கள் என மொத்தம் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 17,48, 866 வாக்காளர்கள் இறுதியாக உள்ளனர்.

சட்டமன்றத் தொகுதி வாரியாக மொத்த வாக்காளர்கள் :

காஞ்சிபுரம் : 3,11,959 ,

உத்திரமேரூர் : 2,67,012 ,

செங்கல்பட்டு : 4,21729 ,

திருப்போரூர் : 3,01,935 ,

செய்யூர் : 2,21,516 ,

மதுராந்தகம் : 2,24,715

மொத்த வாக்காளர்கள் :

ஆண் : 8,53,456

பெண் : 6,95,107

இதரர் : 303

மொத்தம் : 17,48,866

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியை பொருத்தவரை செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதியிலே அதிக வாக்காளர்களாக 4,21,729 வாக்காளர்களும் , குறைந்தபட்சமாக செய்யூர் தொகுதியில் 2,21,516 வாக்காளர்களும் உள்ளனர்.

Updated On: 31 March 2024 1:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!