/* */

ஈரோடு இடைத்தேர்தல்: வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் மையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

ஈரோடு இடைத்தேர்தல்: வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
X

சித்தோடு அரசினர் பொறியியல் கல்லூரியினை (IRTT) மாவட்ட தேர்தல் அலுவலர் கிருஷ்ணனுண்ணி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் மையம் அமைப்பது தொடர்பாக சித்தோடு அரசினர் பொறியியல் கல்லூரியில் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஹெச்.கிருஷ்ணனுண்ணி இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


பின்னர், இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற 27.02.2023 அன்று நடைபெறவுள்ளது. மேலும், பதிவான வாக்குகள் எண்ணிக்கை வருகின்ற 02.03.2023 அன்று நடைபெறவுள்ளது. அதன்படி, இன்று ஈரோடு, சித்தோடு அரசினர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் வாக்கு எண்ணும் மையம் அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வாக்கு எண்ணும் மையம் இறுதி செய்வது தொடர்பாக மாவட்ட தேர்தல் குழு ஆய்வு மேற்கொள்ள வந்துள்ளது, கடந்த 2021 சட்டமன்ற பொது தேர்தலின் போது வாக்கு எண்ணும் மையமாக சித்தோடு அரசினர் பொறியியல் கல்லூரி இருந்தது. தற்போது மீண்டும் இங்கு வாக்கு எண்ணிக்கை மையம் அமைப்பதற்காக பார்வையிட வந்துள்ளோம், தொடர்ந்து, வாக்கு எண்ணும் மையம் இறுதி செய்யப்பட்ட பின்பு அது குறித்த தகவல்கள் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்படும், அதன் பின் வாக்கு எண்ணும் மையம் எங்கு அமைய உள்ளது என்பதை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கும் என தெரிவித்தார்.


இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன், தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான சிவகுமார், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துக்குமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, உதவி இயக்குநர் (நில அளவைத்துறை) சுப்ரமணியம், மாநகராட்சி செயற்பொறியாளர்கள் விஜயகுமார், பாலசுப்ரமணியம் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 24 Jan 2023 1:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  4. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  5. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  6. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  7. ஈரோடு
    சித்தோடு அருகே 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து
  8. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்