/* */

234 தொகுதிகளிலும் தனித்து போட்டி!-அர்ஜுன் சம்பத்

234 தொகுதிகளிலும் தனித்து போட்டி!-அர்ஜுன் சம்பத்
X

அதிமுக கூட்டணியில் நாங்கள் 5 இடங்களை கேட்டுள்ளோம். கூட்டணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டால் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் என திண்டுக்கல்லில் இந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார்.

சட்டமன்ற தேர்தலில் இந்து மக்கள் கட்சி சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் நிர்வாகிகளிடம் இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன்சம்பத் விருப்ப மனுக்களை பெற்றார். முன்னதாக திண்டுக்கல் அபிராமி அம்பிகை கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், இந்து மக்கள் கட்சி ஆன்மீக அரசியலில் ஈடுபட்டு வருகிறது. பாஜக மற்றும் அதிமுக கூட்டணியில் எங்களுக்கு 5 இடங்களை கேட்டுள்ளோம். ஆனால் இதுவரை கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எங்களுக்கு அதிமுகவிடம் இருந்து அழைப்பு வரவில்லை. அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட எங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டால் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இந்து மக்கள் கட்சி தனித்துப் போட்டியிடும்.

காங்கிரஸ் கட்சி விரைவில் ரோமன் கத்தோலிக்க காங்கிரஸ் ஆக மாறிவிடும் . திமுக , அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சிறுபான்மையினர் ஓட்டுகளை பெறுவதற்காக அந்த அமைப்பினை சேர்ந்த நபர்களுக்கு அதிக இடங்களை ஒதுக்கி தருகின்றனர். ஆனால் பெரும்பான்மையாக உள்ள இந்துக்களை பற்றி எந்த அரசியல் கட்சியும் கவலைப்படுவதில்லை. இந்து மக்கள் கட்சி மட்டுமே இந்து மக்களை பாதுகாக்கும் ஒரே கட்சி.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Updated On: 3 March 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது