/* */

'ஓசியில் பயணிக்க மாட்டேன்' மூதாட்டி வீடியோ விவகாரத்தில், கோவை அதிமுக ஐ.டி விங்க் நிர்வாகி மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம், மதுக்கரை போலீஸ் ஸ்டேஷனில், அதிமுக ஐ.டி விங்க் நிர்வாகி பிரிதிவிராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கு முன்னாள் அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

ஓசியில் பயணிக்க மாட்டேன் மூதாட்டி வீடியோ விவகாரத்தில், கோவை  அதிமுக ஐ.டி விங்க் நிர்வாகி மீது வழக்குப்பதிவு
X

அதிமுக ஐடி விங்க் உறுப்பினர் பிருதிவிராஜ் மீது வழக்குப்பதிவு; முன்னாள் அமைச்சர் வேலுமணி கண்டனம்.

கோவை மாவட்டம், மதுக்கரை போலீஸ் ஸ்டேஷனில் அதிமுக ஐ.டி விங்க் பிரிவை சேர்ந்த பிரிதிவிராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. திமுகவை சேர்ந்த ராமு, கொடுத்த புகாரை அடுத்து பிரிதிவிராஜ் மீது, பொது அமைதியை சீர்குலைக்கும் விதமாக செயல்படுதல், இரு பிரிவினரிடையே வேற்றுமை ஏற்படுத்துதல் ஆகிய 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

சில தினங்களுக்கு முன், கோவையில் இலவசமாக பெண்கள் பயணிக்கும் அரசு பஸ்சில் ஏறிய மூதாட்டி ஒருவர், 'ஓசியில் பயணிக்க மாட்டேன். டிக்கெட் கட்டணத்தை வாங்கி கொண்டால்தான், இந்த பஸ்சில் பயணிப்பேன்' என, பஸ் கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது, வீடியோவாக எடுக்கப்பட்டு, சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவியது.

பஸ்களில் இலவசமாக பெண்களை பயணிக்க சலுகை அறிவித்த தமிழக அரசு, அத்யாவசிய பொருட்கள் விலை உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, காஸ் சிலிண்டர் விலை உயர்வு போன்றவற்றால் மக்கள் படும் சிரமத்தை கண்டுகொள்ளவில்லை. இதனால், மக்கள் கடுமையாக சிரமப்படுகின்றனர். இதுகுறித்து கவனித்து, எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது, மின்கட்டண உயர்வையும் மக்கள் மீது திணித்துள்ளது போன்ற கடுமையான விமர்சனங்கள் ஆளுங்கட்சியான தி.மு.க மீது எழுந்தது.

இதையடுத்து, அதிமுகவை சேர்ந்த மூதாட்டியை அரசு பஸ்சில் பயணிக்க வைத்து, டிக்கெட் கேட்டு வாக்குவாதம் செய்ய வைத்து வீடியோ எடுத்து வெளியிட்ட, அ.தி.மு.க., ஐடி விங்கில் உறுப்பினராக உள்ள பிரிதிவிராஜ் மீது, புகார் செய்யப்பட்டு போலீசார் இரு பிரிவுகளில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

முன்னாள் அமைச்சர் கண்டனம்:

அதிமுக தலைமை நிலைய செயலாளர், கோவையை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வேலுமணி, இதுகுறித்த கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அதிமுக தொண்டர் பிரித்திவிராஜ் மீது தொடரப்பட்ட வழக்கை, உடனடியாக வாபஸ் பெற வேண்டும். அதிமுக தொண்டர்களை அச்சுறுத்தும் விதமாக, போலீஸ் துறை வழக்குப்பதிவு செய்து இருப்பது கண்டனத்திற்குரியது. வழக்கை திரும்பப் பெறாவிட்டால், கட்சி தலைமை அனுமதி பெற்று மேற்கு மண்டல போலீஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என, .வேலுமணி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Updated On: 2 Oct 2022 10:41 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்