/* */

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டம், இருசக்கர வாகனப்பேரணியை அமைச்சர் சிவசங்கர் தொடக்கி வைத்தார்.

HIGHLIGHTS

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்
X

அரியலூரில் மாரத்தான் ஓட்டத்தை கொடியசைத்து தொடக்கி வைத்த, மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர். உடன் கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி.


அரியலூரில் போக்குவரத்துத்துறை சார்பில், சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் மற்றும் இரு சக்கர வாகனப் பேரணி நடைபெற்றது. ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு மாரத்தான் ஓட்டம் மற்றும் இருசக்கர வாகனப்பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

இந்த மாரத்தான் ஓட்டம் மற்றும் இருசக்கர வாகனப்பேரணி, ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி, அரியலூர்-ஜெயங்கொண்டம் சாலை, செந்துறை பிரதானச் சாலை வழியாகச் சென்று, மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது. இதில் சாலை பாதுகாப்பு குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட கலெக்டர்பெ.ரமண சரஸ்வதி, எம்எல்ஏக்கள் அரியலூர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ஜெய்னுலாப்தீன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.சுந்தர்ராஜன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பொ.சந்திரசேகர், வட்டார போக்குவரத்து அலுவலர் ப.பிரபாகர் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகள், அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Updated On: 4 Dec 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சீற்றத்தை அடக்கி ஆளும் சீறாப்புதல்வன், 'மௌனம்'..!
  2. லைஃப்ஸ்டைல்
    அடிப்படை தேவைகளுக்கு அப்பால்: நடுத்தர வர்க்கத்தின் கனவுகளும்...
  3. லைஃப்ஸ்டைல்
    அமைதி உங்களுக்குள்தான் இருக்கிறது..? வெளியில் ஏன் தேடுகிறீர்கள்..?
  4. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை ஊட்டும் மேற்கோள்கள்: வாழ்க்கையை வெற்றிபெறும் திறவுகோல்!
  5. கவுண்டம்பாளையம்
    கோவை விமான நிலையத்தில் 1.220 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல்
  6. மேட்டுப்பாளையம்
    கோவையில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    மன ஆரோக்கியத்திற்கு வழி செய்யும் தந்திரங்கள்
  8. வீடியோ
    🔴LIVE : தெலுங்கானாவில் அண்ணாமலையின் அனல் பறக்கும் உரை || #annamalai...
  9. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு..!
  10. உலகம்
    பற்களை திருடி விற்று கோடீஸ்வரரான பலே மருத்துவர்