பற்களை திருடி விற்று கோடீஸ்வரரான பலே மருத்துவர்
வெள்ளி பல்
சில மருத்துவமனைகளில் உடல் உறுப்புகள் திருடி விற்கப்படுவதாக அவ்வப்போது அதிர்ச்சி செய்திகள் வெளியாகும். அந்த வகையில் ஜப்பானில் பற்களை திருடி விற்ற மருத்துவர் ஒருவர் காவல்துறையிடம் சிக்கி இருகிறார் .
ஜப்பானில் உள்ள கியூஷு மருத்துவக்கல்லூரியில் பல் மருத்துவராக பணியாற்றி வந்த அந்த மருத்துவர் மருத்துவமனையில் சேர்த்து வைக்கப்பட்டிருந்த பழைய வெள்ளி பற்களை எடுத்து விற்பனை செய்து வந்துள்ளார்.
அந்த நபர் சுமார் பத்து ஆண்டுகளில் 100 முறைக்கு மேல் மருத்துவமனையில் இருந்து முக்கியமாக பயன்படுத்தப்பட்ட வெள்ளி பற்களை திருடியதாக கூறினார்.
அதே மருத்துவமனையில் பணிபுரிந்து வந்ததால் அவரால் அனைத்து அறைகளுக்குள்ளும் சென்று வர முடிந்த நிலையில், நோயாளிகளிடம் இருந்து எடுக்கப்பட்டு அறையினுள் மறு சுழற்சிக்காக பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்த செயற்கை பற்களை 10 ஆண்டுகளாக யாருக்கும் தெரியாமல் விற்பனை செய்து அவற்றை பணமாக மாற்றி சுமார் 30 மில்லியன் டாலர்கள் (ரூ. 25 கோடிக்கு மேல்) சம்பாதித்தார். .
பயன்படுத்தப்பட்ட வெள்ளி பற்கள் மிகவும் மதிப்புமிக்க வளம் என்று சிலர் கருத்து தெரிவித்தனர். வலிமை மற்றும் ஆயுள் அதிகரிக்க, விலை உயர்ந்த தங்கம் மற்றும் பல்லேடியம் கலந்து வெள்ளி பற்கள் தயாரிக்கப்படுகின்றன. பல்லேடியம் என்பது ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் ஒரு அரிய உலோகமாகும், மேலும் வழக்கமான உள்ளடக்கம் 40 சதவிகிதம் முதல் 50 சதவிகிதம் வெள்ளி, 12 சதவிகிதம் தங்கம் மற்றும் 20 சதவிகிதம் பல்லேடியம் என்று பல் மருத்துவர்கள் கூறுகின்றனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu