/* */

சுதந்திரதின விழா: சிறுவளுர் கிராமத்தில் கிராமசபைக் கூட்டம்

அரியலூர் மாவட்டம் சிறுவளுர் கிராமத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி கலந்துகொண்டார்.

HIGHLIGHTS

சுதந்திரதின விழா: சிறுவளுர் கிராமத்தில் கிராமசபைக் கூட்டம்
X

அரியலூர் மாவட்டம், சிறுவளுர் கிராமத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி கலந்துகொண்டார்.


தமிழக அரசு உத்தரவின்படி, ஊராட்சிகளில் ஜனவரி 26 குடியரசு தினம், மார்ச் 22 உலக தண்ணீர் தினம், மே 1 உழைப்பாளர் தினம், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி, நவம்பர் 1 உள்ளாட்சி தினம் என ஆண்டிற்கு 6 முறை கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்றைய தினம் சுதந்திர தினத்தை முன்னிட்டு, அரியலூர் மாவட்டத்திலுள்ள 201 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றது .

இதில் அரியலூர் ஊராட்சி ஒன்றியம், சிறுவளுர் ஊராட்சியில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது விதி செலவினங்கள், அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி, சுகாதாரம், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை செய்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்-II, கலைஞர் வீடு வழங்கும் திட்டம் 2010 மறுகணக்கெடுப்பு, ஜல் ஜீவன் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் தி;ட்டம், பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம் ஊரகம், பொறுப்புத்துறைகள், கல்வி உதவித்தொகை, உணவு பொருள் வழங்குதல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு உள்ளிட்டவை கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் விவாதிக்கப்பட்டது.

இக்கிராம சபை கூட்டத்தில் அனைத்துத்துறை அலுவலர்கள், சம்மந்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், சமுதாய அமைப்பு உறுப்பினர்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொண்டு முழு ஒத்துழைப்பு வழங்கினர்.

இக்கூட்டத்தில் குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கையினை உடனடியாக சரி செய்திட மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி அறிவுறுத்தினார்.

முன்னதாக, அரியலூர் மாவட்டத்தில் சுதந்திர தின விழாவினை முன்னிட்டு அரியலூர் அருள்மிகு ஆலந்துறையார் கோதண்டராமசாமி கோயிலில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி தொடங்கி வைத்தார் .

இக்கூட்டத்தில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.சுந்தர்ராஜன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட அலுவலர் சிவக்குமார், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) லதா, ஊராட்சி மன்றத்தலைவர் அம்பிகா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள், ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 15 Aug 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்டைல் மா இஞ்சி தொக்கு செய்வது எப்படி?
  2. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  3. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  4. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  7. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!
  8. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டம் 10ம் வகுப்பில் 95.08 சதவீதம் தேர்ச்சி: மாநில அளவில்...
  10. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு