/* */

காங்கிரஸ் கட்சியின் 137- வது ஆண்டு துவக்கவிழா இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 137 வது ஆண்டு துவக்கவிழாவை கட்சியினர் கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

HIGHLIGHTS

காங்கிரஸ் கட்சியின் 137- வது ஆண்டு துவக்கவிழா இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
X

திருமானூரில் காங்கிரஸ் கட்சியின் கிழக்கு வட்டாரம் சார்பில்  கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.


இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 137 வது ஆண்டு துவக்க விழா, அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்தில் கொண்டாடப்பட்டது. திருமானூர் பேருந்து நிலையத்தில், காங்கிரஸ் கட்சியின், திருமானூர் கிழக்கு வட்டாரம் சார்பில், வட்டார தலைவர் சீமான் தலைமையில், துணைத் தலைவர் கங்காதுரை, நகரத் தலைவர் வினோத்குமார் ஆகியோர் முன்னிலையில், கட்சி கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், கட்சியின் கலைப்பிரிவு புகழ் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொண்டனர். மேலும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின், மாவட்ட மகளிர் அணி சார்பில், கீழப்பழுவூர் புதிய பேருந்து நிலையத்தில், மகளிர் அணி மாவட்ட தலைவர் மாரியம்மாள் தலைமையில், மாநில பொதுக்குழு உறுப்பினர் பூண்டி சந்தானம், நகர தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலையில், கட்சி கொடியேற்றப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சியின் ஊராட்சி தலைவர்கள், மேலப்பழுவூர் கோவிந்தராஜ், பார்ப்பனச்சேரி வடமலை, பூண்டி பழனிசாமி, ஐ.என்.டி.யூ.சி. தலைவர் விஜயகுமார் மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியினர், மகிளா காங்கிரஸ், கட்சியின் தொழிற்சங்கத்தினர் கலந்துகொண்டனர்.


Updated On: 29 Dec 2021 8:49 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது