/* */

வாக்கு எண்ணுவதை கண்காணிக்கும் பணியில் 54 நுண்பார்வையாளர்கள்

54 நுண்பார்வையாளர்கள் வாக்கு எண்ணுவதை கண்காணிக்கும் பணியில் ஈடுபட உள்ளனர்.

HIGHLIGHTS

வாக்கு எண்ணுவதை கண்காணிக்கும் பணியில் 54 நுண்பார்வையாளர்கள்
X

அரியலூர்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கு சுழற்சி முறையில் கணினி வாயிலாக அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்கு பணி ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட கலெக்டர் த.ரத்னா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் த.ரத்னா தெரிவித்துள்ளதாவது,

அரியலூர் சட்டமன்ற தொகுதியில் 108942 ஆண் வாக்காளர்களும், 114858 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 223800 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் 103915 ஆண் வாக்காளர்களும், 110099 பெண் வாக்காளர்களும் 2 இதர என மொத்தம் 214016 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.

அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு கீழப்பழுர், அரசு தொழில்நுட்ப கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

அரியலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 376 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான வாக்குகள் 14 மேசைகளில் வைத்து 27 சுற்றுகளிலும், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 377 மையங்களில் பதிவான வாக்குகள் 14 மேசைகளில் வைத்து 27 சுற்றுகளிலும் எண்ணப்பட உள்ளன.

வாக்கு எண்ணிக்கையின்போது ஒரு மேசைக்கு ஒரு நுண்பார்வையாளர், ஒரு கண்காணிப்பாளர், ஒரு வாக்கு எண்ணும் உதவியாளர் மற்றும் ஒரு அலுவலக உதவியாளர் ஆகியோர் கொண்ட குழு பணியில் ஈடுபட உள்ளனர்.

இதில் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் தொகுதிக்கு 20 சதவீத இருப்புடன் தலா 17 கண்காணப்பாளர்கள், 17 உதவியாளர்கள் மற்றும் 17 அலுவலக உதவியாளர்கள் என மொத்தம் 102 அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ளனர்.

தபால் வாக்குகள் 4 மேசைகளில் எண்ணப்பட உள்ளன. ஒரு மேசைக்கு கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், ஒரு கண்காணிப்பாளர், இரண்டு உதவியாளர்கள் ஆகியோர் கொண்ட குழு பணியில் ஈடுபட உள்ளனர்.

இதில் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கு தலா 4 கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 4 கண்காணிப்பாளர்கள் 8 உதவியாளர்கள் என மொத்தம் 32 அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ளனர்.

இராணுவ பணியாளர்களுக்கான தபால் வாக்குகள் ஒரு மேசைக்கு கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மேற்பார்வையாளர், 2 உதவியாளர்கள் கொண்ட குழு பணியில் ஈடுபட உள்ளனர். இதன்படி அரியலூர் சட்டமன்ற தொகுதிக்கு 1 மேசையும், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கு 2 மேசையும் அமைக்கப்பட உள்ளது.

வாக்கு எண்ணும் பணியை கண்காணிப்பதற்காக ஒரு மேசைக்கு ஒரு நுண்பார்வையாளர் வீதம் அரியலூர் சட்டமன்ற தொகுதிக்கு 20 சதவீத இருப்புடன் 26 நுண்பார்வையாளர்களும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கு 28 நுண்பார்வையாளர்களும் பணியில் ஈடுபட உள்ளனர்.

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்திரவின்படி, கணினி முறையில் சுழற்சி அடிப்படையில் பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கு வாக்கு எண்ணும் பணிகள் தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும், வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபட உள்ள அனைத்து அலுவலர்கள், வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் ஊடகத்தினர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்ற சான்று சமர்ப்பித்த நபர்கள் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுமதிக்கப்படுவர்.

வேட்பாளர்களின் முகவர்களுக்கு முக கவசம், பி.பி.இ கிட் உள்ளிட்டவைகள் வழங்கப்பட உள்ளன. மேலும், வாக்கு எண்ணும் மையம் முழுவதும் கிரிமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கை முடிவுகள் ஒவ்வொரு சுற்று முடியும் பொழுதும் முடிவுகளை தெரிவிப்பதற்காக எல்.இ.டி டிவி மற்றும் ஒலி பெருக்கி வசதி செய்யப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் நிகழ்வுகளை கண்காணிப்பதற்காக மாவட்ட கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் 400 காவல்துறையினர், 72 மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

மேலும், மாவட்ட முழுவதும் 600 மேற்பட்ட காவல்துறையினர் ரோந்து மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்லும் அலுவலர்கள், முகவர்கள், பணியாளர்கள் ஆகியோர்களுக்கு தனித்தனியே தடுப்புகள் அமைக்கப்பட்டு அவர்களின் வருகை கண்காணிக்கப்படும்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் வாக்கு எண்ணிக்கை மையம் முழுவதும் இந்திய தேர்தல் ஆணையத்தின் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவக்கைகள் கடைப்பிக்கப்படுவதை மருத்துவக்குழுவினர் மூலமாக உறுதி செய்யப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் த.ரத்னா தெரிவித்தார்.

Updated On: 1 May 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  2. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  3. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  4. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  6. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!
  7. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  8. ஈரோடு
    ஈரோடு மாவட்டம் 10ம் வகுப்பில் 95.08 சதவீதம் தேர்ச்சி: மாநில அளவில்...
  9. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  10. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!