/* */

காய்கறி கடைகளை இடம் மாற்றம் செய்ய எதிர்ப்பு வியாபாரிகள் சாலை மறியல்

கொரோனோ பரவல்

HIGHLIGHTS

காய்கறி கடைகளை இடம் மாற்றம் செய்ய எதிர்ப்பு  வியாபாரிகள் சாலை மறியல்
X

விருதுநகர் மெயின் பஜாரில் இயங்கிவரும் காய்கறி சந்தையை கொரோனோ பரவல் காரணமாக இடமாற்றம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

காய்கறி சந்தையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஒரே நேரத்தில் கூடுவதால் கொரோனோ பரவல் அதிகரிக்கும் அச்சம் உள்ளதால் புதிய பேருந்து நிலையம், நகராட்சி திடல், உழவர் சந்தை ஆகிய மூன்று இடங்களில் இடமாற்றம் செய்து செயல்பட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நகராட்சி நிர்வாகத்தின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து காய்கறி வியாபாரிகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காய்கறி சந்தையை இடமாற்றம் செய்தால் தங்களது வியாபாரம் பாதிக்கப்படும் எனக் கூறி இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி இடமாற்றம் செய்வது குறித்து மீண்டும் ஆலோசனை செய்து நடவடிக்கை எடுப்பதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Updated On: 11 May 2021 5:09 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  2. இந்தியா
    மோடி அரசில் 33 புதுமுகங்கள்; பிரபல அரசியல் குடும்பங்களில் இருந்து ஆறு
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. பொன்னேரி
    கற்கை நன்றே அறக்கட்டளை சார்பில் மாணவிகளுக்கு மிதிவண்டிகள்..!
  6. நாமக்கல்
    கால்நடை மருத்துவர் பட்டப்படிப்பிற்கு ஜூலை 2வது வாரம் கவுன்சலிங்...
  7. நாமக்கல்
    முட்டை விலை மேலும் 10 பைசா உயர்வு ஒரு முட்டை ரூ. 4.80
  8. பூந்தமல்லி
    ஸ்ரீ கங்கையம்மன் கோவிலின் முதலாம் ஆண்டு தீமிதி திருவிழா!
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை...
  10. திருவள்ளூர்
    ஸ்ரீமதுரை வீரன், ஸ்ரீமுனீஸ்வரர், ஸ்ரீதேவி நாகாத்தம்மன் கோவிலின் 11-ம்...