கால்நடை மருத்துவர் பட்டப்படிப்பிற்கு ஜூலை 2வது வாரம் கவுன்சலிங் தொடக்கம் - துணைவேந்தர் தகவல்

கால்நடை மருத்துவர் பட்டப்படிப்பிற்கு  ஜூலை 2வது வாரம் கவுன்சலிங் தொடக்கம்  - துணைவேந்தர் தகவல்

பட விளக்கம் : கால்நடை மருத்துவர் பட்டப்படிப்பிற்கு ஜூலை 2வது வாரம் கவுன்சலிங் தொடக்கம் - துணைவேந்தர் தகவல்

கால்நடை மருத்துவர் பட்டப்படிப்பிற்கு ஜூலை 2வது வாரம் கவுன்சலிங் தொடங்கவுள்ளதாக துணைவேந்தர் தகவல் தெரிவித்துள்ளார்.

நாமக்கல்,

கால்நடை மருத்துவர் (பிவிஎஸ்சி) இளநிலை பட்டப்படிப்பிற்கு ஜூலை 2வது வாரம் சேர்க்கை கவுன்சலிங் நடைபெறும் என கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை துணைவேந்தர் செல்வகுமார் கூறினார்.

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில், முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில், ரூ. 5 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய புதிய கலையரங்கம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை துணைவேந்தர் செல்வகுமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புதிய கலையரங்கத்தை திறந்து வைத்துப் பேசினார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கால்நடை மருத்துவ அறிவியல் பாடத்திற்கு (பிவிஎஸ்சி) தொடர்ந்து மாணவர்களிடையே அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த ஆண்டு தேனி, உடுமலைப்பேட்டை உள்ளிட்ட 3 கால்நடை மருத்துவ கல்லூரிகளில், தலா 20 இடங்கள் வீதம் 60 இடங்கள் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டு சேர்க்கை நடைபெற உள்ளது. இளநிலை கால்நடை மருத்துவ படிப்புக்கு 660 சேர்க்கை இடங்களும், உணவுத்துறை 40, கோழியினத்துறை 40, பால்வளத்துறை 20, ஆகிய தொழில் நுட்ப பட்டப் படிப்புகளுக்கு மொத்தம் 100 இடங்களும், மாணவர்கள் சேர்க்கைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இளநிலை கால்நடை மருத்துவ படிப்புக்கு (பிவிஎஸ்சி) தமிழக மாணவர்களுக்கு 600 இடங்களும், அகில இந்திய மாணவர்களுக்கு 60 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அகில இந்திய அளவில் உள்ள 15 கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையில், தமிழகத்தில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவர் அறிவியல் பல்கலை தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளாக முதன்மை பல்கலையாக திகழ்ந்து வருகிறது. குறிப்பாக, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை பெறுவதற்கு, மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கால்நடை மருத்துவர் அறிவியல் இளநிலை பட்டப் படிப்பிற்கு வரும் 21 வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்படும். இதுவரை, இப்படிப்பில் சேர்வதற்கு 7,500 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில் வரும், ஜூலை 2-ம் வாரம் கால்நடை மருத்துவர் இளநிலை பட்டப்படிப்புகளுக்கு சேர்கைக்கான கவுன்சலிங் துவங்குகிறது. பிளஸ் 2 வகுப்பில் பயாலஜி, பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி ஆகிய பாடங்களில் மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் என அவர் கூறினார்.

Tags

Next Story