/* */

தரமற்ற விதை விற்றால் சிறை! விதை ஆய்வு துணை இயக்குனர் எச்சரிக்கை

தரமற்ற விதைகளை விற்பனை செய்தால் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று, விருதுநகர் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் எச்சரித்துள்ளார்.

HIGHLIGHTS

தரமற்ற விதை விற்றால் சிறை!  விதை ஆய்வு துணை இயக்குனர் எச்சரிக்கை
X

இது தொடர்பாக, விருதுநகர் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் நாச்சியார் அம்மாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

விதை ஆய்வாளர்கள் அரசு மற்றும் அரசு சார்ந்த, தனியார் விதை விற்பனை நிலையங்களில் இருப்பு, தரம், பராமரிப்பு, பதிவு சான்றிதழ், பரிசோதனை அறிக்கை குறித்து ஆய்வு செய்கின்றனர். தரம் குறைவு தெரிந்தால் விற்பனைக்கு தடை விதிக்கப்படுகிறது.

விதை விற்பனை உரிமம், இருப்பில் உள்ள ரகங்கள், விலை, இருப்பு விவரங்களை தகவல் பலகையில் எழுத வேண்டும். காலாவதி விதைகளை விற்பனை செய்யக்கூடாது. அவ்வாறு விற்பனை செய்தால் முதல் முறையாக தவறு செய்தால் ரூ.500 அபராதம், இரண்டாம் முறையும் தவறு செய்தால் ரூ.1000 அபராதம் அத்துடன் 6 மாதம் சிறை விதிக்கப்படும் என, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 28 April 2021 3:36 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    பணிநீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க H-1B விசா வைத்திருப்பவர்களுக்கான புதிய...
  2. லைஃப்ஸ்டைல்
    பிறை காணும் பெருநாளுக்கு வாழ்த்துச் சொல்வோமா..?
  3. வணிகம்
    இந்திய மசாலாப் பொருட்களின் மீது உணவுப் பாதுகாப்பு அமைப்பின் புதிய...
  4. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  5. கோவை மாநகர்
    வேளாண் பல்கலைக் கழகத்தில் உலக தாவர நல தின நாள் கொண்டாட்டம்!
  6. தொண்டாமுத்தூர்
    ரூ. 2 லட்சம் மதிப்புள்ள உயர் ரக போதை பொருள் பறிமுதல்: 3 பெண்கள் உள்பட...
  7. இந்தியா
    சிஏஏ திட்டதின் கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்
  8. அரசியல்
    ஐஎன்டிஐஏ ஆட்சிக்கு வந்தால் வெளியில் இருந்து ஆதரவு: மம்தா அறிவிப்பு
  9. காஞ்சிபுரம்
    அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு
  10. லைஃப்ஸ்டைல்
    அப்பா அம்மாவுக்கு கல்யாண நாள் வாழ்த்து- இப்படிக்கு பிள்ளைகள்..!